இந்தியா

தமிழகத்துக்கான மண்ணெண்ணெய் அளவை மத்திய அரசு குறைப்பு - அமைச்சர் காமராஜ்

தமிழகத்துக்கு வழங்க வேண்டிய மண்ணெண்ணெய் அளவை மத்திய அரசு தொடர்ந்து குறைத்து வருவதாக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் திங்கள்கிழமை சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

ENS

தமிழகத்துக்கு வழங்க வேண்டிய மண்ணெண்ணெய் அளவை மத்திய அரசு தொடர்ந்து குறைத்து வருவதாக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் திங்கள்கிழமை சட்டப்பேரவையில் தெரிவித்தார். 

திமுக சட்டப்பேரவை உறுப்பினர் அன்பழகன் சட்டப்பேரவையில், ரேஷன் கார்ட் உறுபினர்களுக்கு வழங்கும் மண்ணெண்ணெய் அளவை குறைப்பதாக கூறினார். மேலும், இதற்கு முன் அவர்களுக்கு வழங்கி வந்த அதே அளவை மீண்டும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். 

இதற்கு பதிலளித்த உணவுத் துறை அமைச்சர் காமராஜ் கூறுகையில், 

"முன்னதாக, 54.000 கிலோ லிட்டர் மண்ணெண்ணெயை மத்திய அரசு மாதந்தோறும் தமிழகத்துக்கு வழங்கி வந்தது. இந்த அளவு படிப்படியாக குறைந்து தற்போது 16,148 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் தான் தமிழகத்துக்கு வழங்கப்படுகிறது. அதனால், அதற்கேற்ப கார்ட் உறுப்பினர்களுக்கு மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது" என்றார்.   

தமிழகத்தின் மண்ணெண்ணெய் பயன்பாட்டின் தேவை 42,668 கிலோ லிட்டர். கடந்த அக்டோபர் 2017 முதல் மத்திய அரசு தேவை அளவில் 38 சதவீத மண்ணெண்ணெயை மட்டுமே தமிழகத்துக்கு வழங்கி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளர் இறுதிப் பட்டியல்: ஈரோட்டில் 17 லட்சத்து 40 ஆயிரம் பேர்!

மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!

ஏற்றத்தில் பங்குச்சந்தை! ஆட்டோ, வங்கிப் பங்குகள் உயர்வு!

தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு

விரோஷ்! திருமணத்திற்கு பெயரிட்ட விஜய் தேவரகொண்டா!

SCROLL FOR NEXT