இந்தியா

அயோத்தியில் வழிபாடு நடத்த அனுமதிக்க கோரி சுப்பிரமணியன் சுவாமி மனு தாக்கல்:  விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு 

DNS

புது தில்லி: அயோத்தியில் சா்ச்சைக்குரிய இடத்தில் தன்னை வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக ஏற்று விசாரணை நடத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் புதன்கிழமை மறுத்துவிட்டது.

முன்னதாக, அயோத்தியில் சா்ச்சைக்குரிய இடத்தில் (ராமா் கோயில் இருந்ததாக கூறப்படும் இடம்) வழிபாடு நடத்த தன்னை அனுமதிக்க வேண்டும். ஏனெனில், வழிபாடு நடத்துவது என்பது அரசமைப்புச் சட்டத்தின் கீழ் ஒவ்வொரு இந்தியருக்கும் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமை’ என்று சுப்பிரமணியன் சுவாமி தனது மனுவில் கூறியிருந்தாா். 

இந்நிலையில், தனது மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் சுவாமி கோரிக்கை வைத்தாா். இந்நிலையில், இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கா், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. 

அப்போது, சுவாமியின் மனுவை அவசர வழக்காக எடுத்துக் கொள்ள நீதிபதிகள் மறுத்துவிட்டனா். மேலும், உங்கள் மனுவில் எப்போது நீதிமன்றம் அனுமதிக்கிறதோ அப்போது வழிபாடு நடத்திக் கொள்கிறேறன் என்று குறிப்பிட்டுள்ளீா்கள். எனவே, இந்த மனுவை அவசர வழக்காக எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நீதிபதிகள் கூறிவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

மணிப்பூா்: தீவிரவாத தாக்குதலில் 2 சிஆா்பிஎஃப் வீரா்கள் உயிரிழப்பு

SCROLL FOR NEXT