ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கு: சபாநாயகருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கக் கோரும் வழக்கில் சபாநாயகருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கக் கோரும் வழக்கில் சபாநாயகருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஓபிஎஸ் உட்பட 11 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில் பேரவைத் தலைவருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பை எதிர்த்து திமுக கொறடா சக்கரபானி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் ஏகே சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
Advertisement
அப்போது சபாநாயகர் தனபால், சட்டப்பேரவை செயலாளர் மற்றும் ஓபிஎஸ் உட்பட எம்எல்ஏக்கள் 11 பேரும் 4 வாரத்தில் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.