தில்லி தனியார் மருத்துவமனையில் ஏழை மக்களுக்கு இலவச சிகிச்சை: உச்சநீதிமன்றம் உத்தரவு
தில்லியில் அரசு மூலம் குறைந்த விலையில் நிலம் பெற்ற தனியார் மருத்துவமனைகள் ஏழை மக்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
தில்லியில் அரசு மூலம் குறைந்த விலையில் நிலம் பெற்ற தனியார் மருத்துவமனைகள் ஏழை மக்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
தில்லியில் ஒரு சில தனியார் மருத்துவமனைகளுக்கு தில்லி அரசு குறைந்த விலையில் நிலங்களை வழங்கியுள்ளது. இதன்படி, குறைந்த விலையில் நிலங்களை பெற்று அந்த இடத்தில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனைகள், சமூகத்தில் ஏழை மக்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி, மொத்த வெளி நோயாளிகளின் எண்ணிக்கையில் 25 சதவீத பேருக்கும், உள் நோயாளிகளின் மொத்த எண்ணிக்கையில் 10 சதவீத பேருக்கும் அந்த குறிப்பிட்ட மருத்துவமனைகள் இலவசமாக சிகிச்சை அளிக்க வேண்டும்.
Advertisement
இந்த தீர்ப்பை எதிர்த்தால் குறிப்பிட்ட மருத்துவமனையின் ஒப்பந்தம் ரத்து செய்யபட வேண்டிய நிலை ஏற்படும் என்றும் உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், இந்த விவகாரம் குறித்து தில்லி அரசு உச்சநீதிமன்றத்திடம் குறிப்பிட்ட காலங்களுக்கு ஒரு முறை அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.