முகப்பு
இந்தியா

டிக்கெட் எடுக்காத பயணிகளால் மத்திய ரயில்வேக்கு ரூ.59 கோடி வருவாய்!

டிக்கெட் எடுக்காத பயணிகளால் மத்திய ரயில்வேக்கு ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை மட்டும் ரூ.59.36 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:13 PM
பகிர்:

டிக்கெட் எடுக்காத பயணிகளால் மத்திய ரயில்வேக்கு ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை மட்டும் ரூ.59.36 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

இதுகுறித்து மத்திய ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

ஜூன் மாதம் மட்டும் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் மேற்கொண்டவர்கள் மீது 3.26 லட்சம் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. இவற்றின் மூலம் அபராதத் தொகையாக ரூ. 17.20 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

இதுவே ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் மட்டும் 10 லட்சத்து 85 ஆயிரம் பேர் மீது டிக்கெட் இல்லாமல் பயணம் மேற்கொண்டது உள்ளிட்ட விதிமீறல் குற்றச் செயல்கள் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இவற்றின் மூலம் மட்டும் இக்காலகட்டத்தில் மத்திய ரயில்வேக்கு ரூ.59 கோடியே 36 லட்சம் ரூபாய் அபராதத் தொகை கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வேறு நபர்கள் பெயரில் பயணச்சீட்டு பதிவு செய்து பயணம் செய்தவர்களால் ஜூன் மாதம் மட்டும் 391 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவற்றின் மூலம் ரூ.4 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.