இந்தியா

காங்கிரஸின் சுயரூபத்தை ராகுல் வெளிப்படுத்திவிட்டார்: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் சாடல்

காங்கிரஸ் முஸ்லிம்களின் கட்சி என்ற சுயரூபத்தை ராகுல் வெளிப்படுத்திவிட்டார் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் திங்கள்கிழமை சாடியுள்ளார்.

ANI

காங்கிரஸ் முஸ்லிம்களின் கட்சி என்ற சுயரூபத்தை ராகுல் வெளிப்படுத்திவிட்டார் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் திங்கள்கிழமை சாடியுள்ளார்.

ஜூலை 11-ஆம் தேதி முக்கிய முஸ்லிம் தலைவர்களை காங்கிரஸ் தலைவர் ராகுல் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல், ஆம் காங்கிரஸ் முஸ்லிம்களின் கட்சி என்று தெரிவித்தார். ராகுலின் இந்த கருத்து பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான பிரகாஷ் ஜாவடேகர், இதுதொடர்பாக கூறியதாவது:

காங்கிரஸ் முஸ்லிம்களின் கட்சி என்ற சுயரூபத்தை அக்கட்சியின் தலைவர் ராகுல் வெளிப்படுத்திவிட்டார். ஆனால் அதுகுறித்து தற்போது எதுவும் கூறாமல் மௌனம் காத்து வருகிறார். இருப்பினும் தனது கருத்தை ராகுல் மறுக்க முடியாது. ஏனென்றால் அதற்கு சாட்சி உள்ளது. 

பிரபல உருது நாளிதழான இங்கலாப், இதுதொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளது. அந்த இதழுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மையின தலைவர், ராகுல் கூறியதாக அதே கருத்தை பிரதிபலித்துள்ளார். தவறான தகவல்களை பத்திரிகைகள் என்றும் வெளியிட்டது கிடையாது. எனவே காங்கிரஸ் முஸ்லிம்களின் கட்சி என்று ராகுல் கூறியதற்கு ஆதாரம் உள்ளது என்றார்.

இதனிடையே, காங்கிரஸ் முஸ்லிம்களின் கட்சி என்று ராகுல் கூறிய இக்கருத்தை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து மறுத்து வருகிறது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சட்டவிரோத குடியேற்றம்: தில்லியில் 5 வங்கதேசத்தினர் கைது!

கையில் பணமில்லை.. நடைபாதையில் படுத்துறங்கிய மென்பொருள் நிறுவன ஊழியர்!

திமுக ஆட்சியில் நிறையும் இருக்கு, குறையும் இருக்கு!பவர்கட் பிரச்னைக்கு தீர்வில்லை!-பிரேமலதா விஜயகாந்த்

சத்ரபதி சிவாஜி குறித்த புதிய படம்.. தடை செய்ய ஹிந்துத்துவ அமைப்பு வலியுறுத்தல்! ஏன்?

கடைசி நாளில் இங்கிலாந்து அணி பயந்துவிட்டது: இங்கிலாந்து முன்னாள் கேப்டன்

SCROLL FOR NEXT