மற்ற பொறியாளர்களை விட, ஐஐடி, ஐஐஎம்-மில் படித்தவர்களுக்கு இரண்டு மடங்கு அதிக ஊதியம்
இதர பொறியியல் கல்லூரிகளில் படித்த மாணவர்களை விடவும், ஐஐடிக்களில் படித்த பொறியாளர்களுக்கு 137சதவீதம் அதிக ஊதியம் வழங்கப்படுகிறது.
மும்பை: இதர பொறியியல் கல்லூரிகளில் படித்த மாணவர்களை விடவும், ஐஐடிக்களில் படித்த பொறியாளர்களுக்கு 137சதவீதம் அதிக ஊதியம் வழங்கப்படுகிறது.
இதே போல, மற்ற மேலாண்மைக் கல்வி மாணவர்களைக் காட்டிலும் ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனத்தில் படித்த எம்பிஏ மாணவர்களுக்கு 121 சதவீதம் அதிக ஊதியம் வழங்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மாணவர்களின் தனித் திறன் தேர்வுகளின் போது ஐஐடி அல்லது சிஎஸ் போன்ற கல்வி நிறுவனங்களின் மாணவர்கள் மற்ற கல்வி நிறுவனங்களில் பயின்ற மாணவர்களைக் காட்டிலும் அதிகம் பிரகாசிப்பதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.