கோப்புப்படம் 
இந்தியா

ஈரானில் வாடும் 21 தமிழர்களை மீட்க சுஷ்மாவிடம் கனிமொழி வலியுறுத்தல்

ஈரானில் வாடும் 21 தமிழர்கள் பாதுகாப்பாக இந்தியா திரும்புவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு சுஷ்மா ஸ்வராஜிடம் கனிமொழி வலியுறுத்தினார்.

தினமணி செய்திச் சேவை

ஈரானில் வாடும் 21 தமிழர்கள் பாதுகாப்பாக இந்தியா திரும்புவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு சுஷ்மா ஸ்வராஜிடம் கனிமொழி வலியுறுத்தினார்.  

தமிழகத்தின் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த 21 பேர் மீனவர்களாக வேலை செய்து வருகின்றனர். இவர்கள் மிகவும் மோசமாக நடத்தப்படுவதாக தெரிகிறது. 

இதுதொடர்பாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜிடம் மனு அளித்தார். அந்த மனுவில், 

"தமிழகத்தின் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த 21 பேர் ஈரானில் கடந்த 6 மாதங்களாக மீனவர்களாக வேலை செய்து வருகின்றனர். அவர்கள் அங்கு ஊதியம் தராமல் மோசமாக நடத்தப்படுவதாகவும், அவர்களின் உரிமையாளர் அவர்களின் அடையாள அட்டைகள், கடவுச் சீட்டுகள் ஆகியவற்றை திருப்பித் தராமல் வைத்திருப்பதாகவும் தெரிய வருகிறது. 

ஆகவே, அந்த மீனவர்கள் பாதுகாப்பாக இந்தியா திரும்புவதற்கு தங்களது அலுவலகம் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்னை யாரும் இயக்கவில்லை: செங்கோட்டையன் பேட்டி

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT