இந்தியா

பசு பாதுகாப்பு வன்முறை: ராஜஸ்தான் அரசுக்கு எதிரான வழக்கை ஏற்றது உச்ச நீதிமன்றம்

பசு பாதுகாப்பு வன்முறை சம்பவம் தொடர்பாக ராஜஸ்தான் அரசு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.   

ENS

பசு பாதுகாப்பு வன்முறை சம்பவம் தொடர்பாக ராஜஸ்தான் அரசு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.   

ராஜஸ்தான் மாநிலம், ஆல்வார் பகுதியில் வெள்ளிக்கிழமையன்று பசு மாடுகளை கடத்திச் செல்வதாக கூறி இஸ்லாமிய இளைஞர்கள் 2 பேர் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. அந்த கும்பலிடம் இருந்து ஒருவர் தப்பியோடிவிட்டார். அவர்களிடம் சிக்கிக்கொண்ட மற்றொரு இளைஞர் கடுமையாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். 

கடந்த வாரம் தான், பசு பாதுகாப்பு என்ற பெயரில் வன்முறையில் ஈடுபட யாருக்கும் உரிமையில்லை என்று உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும், பசு பாதுகாப்பு என்ற பெயரில் நிகழும் வன்முறைகளை தடுக்க மத்திய அரசு ஏன் புதிய சட்டம் இயற்றக் கூடாது என்ற கேள்வியையும் எழுப்பியிருந்தது. 

இந்நிலையில், ராஜஸ்தானில் நிகழ்ந்த சம்பவம் தேசிய அளவில் மிகப் பெரிய பிரச்னையாக எழுந்துள்ளது. 

இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக ராஜஸ்தான் அரசு மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு துஷார் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் தேஹ்சீன் பூனாவாலா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் வழக்கை ஆகஸ்ட் 28-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக திங்கள்கிழமை தெரிவித்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெள்ளை ரோஜா... நேஹா ஷெட்டி!

ஜெய்ஸ்வால், ஆகாஷ் தீப் அரைசதம்; இந்தியா 166 ரன்கள் முன்னிலை!

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

SCROLL FOR NEXT