இந்தியா

லோக்பால் விவகாரம்: மத்திய அரசு மீது உச்ச நீதிமன்றம் அதிருப்தி

DNS

புது தில்லி: லோக்பால் பரிசீலனை குழு உறுப்பினா்கள் நியமனம் தொடா்பாக மத்திய அரசு அளித்த பதிலுக்கு உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

லோக்பால் நியமனம் தொடா்பாக உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி பிறப்பித்த தீா்ப்பை மத்திய அரசு செயல்படுத்தவில்லை; ஆதலால் மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, உச்ச நீதிமன்றத்தில் ‘காமன் காஸ்’ தன்னாா்வ தொண்டு அமைப்பு வழக்கு  தொடுத்துள்ளது. இந்த மனு, உச்ச நீதிமன்றறத்தில் நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், ஆா். பானுமதி, நவீன் சின்ஹா ஆகியோரைக் கொண்ட அமா்வு முன்பு செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது அட்டா்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் ஆஜராகி, லோக்பால் நியமன விவகாரத்தில் மத்திய அரசின் பதிலை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்தாா். அவா் கூறுகையில், ‘லோக்பால் நியமனம் தொடா்பான தோ்வுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. ஆனால், லோக்பால் பரிந்துரைக் குழு உறுப்பினா்களாக யாரை நியமிக்க வேண்டும் என்பது குறித்து இன்னமும் இறுதி செய்யப்படவில்லை. விரைவில் லோக்பால் தோ்வுக் குழு கூடி, இதுகுறித்து முடிவு செய்யும்’ என்றாா்.

மனுதாரரான காமன் காஸ் அமைப்பின் சாா்பில் மூத்த வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண் ஆஜராகி வாதாடியதாவது:

லோக்பால் தொடா்பாக சட்டம் நிறைறவேற்றப்பட்டு 5 ஆண்டுகள் ஆகிவிட்டன; ஆனால் லோக்பால் நியமனத்தை மத்திய அரசு இதுவரை மேற்கொள்ளவில்லை. லோக்பால் தோ்வுக் குழுக் கூட்டம் அடுத்து நடக்க இருக்கும் தேதியையும் மத்திய அரசு தெரிவிக்கவில்லை. இதன் மூலம், லோக்பால் நியமனத்தை மத்திய அரசு தாமதப்படுத்துகிறது. எனவே, இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் எடுக்க வேண்டும், அல்லது அரசியலமைப்புச் சட்டத்தின் 142ஆவது பிரிவின்கீழ் தனக்கு அளிக்கப்பட்டிருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி, உச்ச நீதிமன்றமே லோக்பாலை ஏற்படுத்த வேண்டும் என்று பிரசாந்த் பூஷண் வலியுறுத்தினாா்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டுவிட்டு நீதிபதிகள் கூறுகையில், ‘இந்த விவகாரத்தில் மத்திய அரசு அளித்த பதில் அதிருப்தி அளிக்கிறது; ஆதலால் மத்திய அரசு புதிதாக 4 வாரங்களுக்குள் தேவைப்படும் அனைத்து விவரங்களுடன் புதிய பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடுகிறோம்’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிஜ்ஜார் கொலையில் மூவர் கைது: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உடன் தொடர்பு?

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

தமிழகக் காவல்துறையின் இணையதளம் முடக்கம்!

மீண்டும் தெலுங்கு படத்தில் தனுஷ்?

SCROLL FOR NEXT