முகப்பு
இந்தியா

அமர்நாத் யாத்திரை: இதுவரை  2,46,667 பேர் தரிசனம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் இமயமலை பகுதியில் உள்ள அமர்நாத் குகைக் கோயிலில் இதுவரை 2 லட்சத்துக்கும்

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:20 PM
பகிர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் இமயமலை பகுதியில் உள்ள அமர்நாத் குகைக் கோயிலில் இதுவரை 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பனிலிங்கத்தை தரிசித்துள்ளனர். 

கடந்த ஜூன் 28-ம் தேதி அமர்நாத் குகைக்கோயில் தரிசனம் தொடங்கியது. பலத்த பாதுகாப்புக்கிடையே இதுவரை 2,46,667 பேர் குகைகோயில் பனிலிங்கத்தை தரிசித்து திரும்பியுள்ளனர். 

யாத்திரையின் 28-ம் நாளான இன்று 4,502 யாத்ரீகர்கள் அடங்கிய புதிய குழு ஒன்று புறப்பட்டு சென்றது. அதில், 667 பேர் அடங்கிய சிறிய குழு ஜம்முவின் பகவதி நகர் முகாமில் இருந்து 19 வாகனங்களில் புறப்பட்டனர்.  

ஆகஸ்ட் 26-ம் தேதி ரக்ஷா பந்தன் அன்று அமர்நாத் யாத்திரை நிறைவடைகின்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.