இந்தியா

பாகிஸ்தான் மக்கள் பயங்கரவாதத்துக்கு எதிராக வாக்களித்துள்ளனர் - மத்திய இணை அமைச்சர்

DIN

பாகிஸ்தானில் மக்கள் பயங்கரவாதத்துக்கு எதிராக வாக்களித்துள்ளதாக மத்திய உள்துறை விவகாரத்துறை அமைச்சக இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹிர் தெரிவித்துள்ளார்.  

பாகிஸ்தானில் நடைபெற்ற தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான பிடிஐ கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கவுள்ளது. 

இந்த தேர்தல் முடிவு குறித்து மத்திய அமைச்சர்கள் கருத்து தெரிவித்ததாவது, 

மத்திய அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹிர்:

"தற்போது அங்கு அமைந்துள்ள அரசு இந்தியாவுடன் நல்லுறவை வைத்துக்கொள்ளும் என்று எதிர்பார்க்கிறோம். இதில் சிறப்பம்சமே ஹபீஸ் சயீத் எதிராக வாக்களித்தன் மூலம் பாகிஸ்தான் மக்கள் பயங்கரவாதத்துக்கு எதிராக வாக்களித்துள்ளனர்" என்றார்.

மத்திய அமைச்சர் ஆர்கே சிங்:

"இந்தியாவுடனான பிரச்னையில் எந்த மாற்றத்தையும் நான் பார்க்கவில்லை. முக்கிய பிரச்னையான பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்வதில் மாற்றம் இருக்காது. இதுபோன்ற திட்டங்களை ராணுவம் தான் தீர்மானிக்கும், அது இனியும் தொடரும்" என்றார்.  

பாஜக தலைவர் ஷாநவாஸ் ஹூசைன்:

"ராணுவத்துடைய தலையீட்டிலேயே பாகிஸ்தான் தேர்தல் நடந்து முடிந்துள்ளது" என்றார்.  

பாகிஸ்தானில் ஒரு சில ஊடகங்கள் மற்றும் எதிர்க்கட்சிகள், இம்ரான் கானுக்கு சாதகமாகவே இந்த தேர்தல் நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவை சீனா ஒருபோதும் சமமாக கருதாது: யுஎஸ்ஐஎஸ்பிஎஃப் தலைவா்

குடிநீா் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: அதிமுக எம்எல்ஏக்கள் ஆட்சியரிடம் மனு

இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் 12 போ் காயம்

ஓடும் பேருந்திலிருந்து இறங்கிய விவசாயி சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு

தண்ணீரைத் தேடி வந்த யானை...

SCROLL FOR NEXT