ஆம்புலன்ஸ் சேவைக்காக கர்பிணி பெண்ணை தூக்கிச் சென்ற சம்பவம்: ஆந்திர அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
ஆந்திராவில் ஆம்புலன்ஸ் சேவைக்காக 12 கி.மீ வரை கர்பிணி பெண்ணை தூக்கிச் சென்று, குழந்தை இறந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிக்க ஆந்திர அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆந்திராவில் ஆம்புலன்ஸ் சேவைக்காக 12 கி.மீ வரை கர்பிணி பெண்ணை தூக்கிச் சென்று, குழந்தை இறந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிக்க ஆந்திர அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் விஜயநகரம் மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இங்கு, ஜிந்தம்மா என்ற இளம்பெண் செவ்வாய்கிழமை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அந்த பகுதிக்கு ஆம்புலன்ஸ் வாகனம் செல்லும் அளவுக்கு போதிய வசதி கிடையாது.
அதனால், ஆம்புலன்ஸ் சேவைக்காக 12 கி.மீ தூரம் அந்த பெண் மூங்கில் மற்றும் துணியின் உதவியால் மலைப்பாதை வழியாக தூக்கிச் செல்லப்பட்டார். அந்த பெண் பாதி வழியிலேயே குழந்தையை ஈன்றார். ஆனால், பிறந்த குழந்தை துரதிருஷ்டவசமாக உயிரிழந்தது.
Advertisement
ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்துவதற்காக 12 கிமீ தூரம் வரை கர்பிணி பெண்ணை தூக்கிச் சென்ற சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, ஆந்திர அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் இதுதொடர்பாக விரிவான அறிக்கையை 4 வார காலத்துக்குள் சமர்பிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், கடந்த ஒரு ஆண்டில் இதுபோன்ற சம்பவங்கள் குறித்தான தகவலையும் இணைத்து சமர்பிக்குமாறு மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.