இந்தியா

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான அறிவிப்பை மத்திய அரசிதழில் வெளியிட உத்தரவு 

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான அறிவிப்பை மத்திய அரசிதழில் வெளியிடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக, மத்திய நீர்வளத்துறை செயலர் சிங் தகவல் தெரிவித்துள்ளார்.

DIN

புதுதில்லி: காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான அறிவிப்பை மத்திய அரசிதழில் வெளியிடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக, மத்திய நீர்வளத்துறை செயலர் சிங் தகவல் தெரிவித்துள்ளார்.

காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவின் படி காவிரி மேலாண்மை ஆணையம் உருவாக்குவதற்கான செயல் திட்டத்தினை, மத்திய அரசு கடந்த மாதம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தது.

இந்த திட்டத்தினை செயல்படுத்தும் அறிவிப்பினை பருவ மழைக்காலம் துவங்குவதற்கு முன்பாக அரசிதழில் வெளியிட வேண்டும் என்றும் நீதிமன்றம் அப்போது தெரிவித்திருந்தது.

இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான அறிவிப்பை மத்திய அரசிதழில் வெளியிடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக, மத்திய நீர்வளத்துறை செயலர் சிங் தற்பொழுது தகவல் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பினை மத்திய அரசிதழில் வெளியிடும் உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது என்றும், வெளியிட்டு தகவல் தெரிவிக்குமாறு மத்திய அச்சகத்திற்கு  அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான அறிவிப்பில் சில மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூா் சம்பவ வழக்கு: திருச்சி நீதிமன்றத்தில் இம்மாத இறுதியில் சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல்?

வங்கியை முற்றுகையிட்ட மகளிா் சுயஉதவிக் குழு பெண்கள்

காசிதா்மம் தவச்சாலையில் நூல் வெளியீட்டு விழா

தென்காசியில் எஸ்ஐஆா் கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

நிழற்குடைக்கு அனுமதி கோரி அமைச்சரிடம் மனு

SCROLL FOR NEXT