FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

இடி, மின்னல் தாக்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம்

உத்தரப் பிரதேசத்தில் இடி, மின்னல் தாக்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

30 ஜனவரி 2024, 6:42 pm IST
கோப்புப்படம்
பகிர்:

உத்தரப் பிரதேசத்தில் கடந்த மாதம் 29-ஆம் தேதி இடி, மின்னல் தாக்கி 15 பேர் வரை உயிரிழந்தனர். மேலும், 9 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டார். 

இதில் பாதிக்கப்பட்டவர்கள் மொராதாபாத், முஸாபர்நகர், மீரட், அம்ரோஹா மற்றும் சாம்பல் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். மரங்கள், மின் கம்பங்கள் பல இடங்களில் சரிந்து மிகப் பெரிய சேதத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments