இந்தியா

நீட் தேர்வு முடிவுகள் இன்றே வெளியீடு!

மருத்துவப் படிப்புகளுக்கு நாடு முழுவதும் நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்றே வெளியாக உள்ளது என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளர் அனில் ஸ்வரூப் அறிவித்துள்ளார்.

DIN

மருத்துவப் படிப்புகளுக்கு நாடு முழுவதும் நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட உள்ளன என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த முடிவுகள் இன்றே (திங்கள்கிழமை) வெளியிடப்பட உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளர் அனில் ஸ்வரூப் ட்விட்டரில் அறிவித்துள்ளார். 

இதையடுத்து, நீட் தேர்வுக்கான முடிவுகளை சிபிஎஸ்இ இன்னும் சற்று நேரத்தில் வெளியிட உள்ளது. தேர்வு முடிவுகள் இன்றே வெளியாக இருப்பதால் மருத்துவப் படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.     

மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை http://www.cbseneet.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

நாடு முழுவதும் உள்ள எம்.பி.பி. எஸ்., பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் மாநில ஒதுக்கீடு, சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் ஆகிய ஆயுஷ் படிப்புகள், கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீடு, வெளிநாட்டில் மருத்துவம் படிக்கச் செல்லும் மாணவர்கள் ஆகியோருக்கான நீட் நுழைவுத் தேர்வு மே 6-ஆம் தேதி நடைபெற்றது.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்திய இந்தத் தேர்வில் நாடு முழுவதிலும் இருந்து 13 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். தமிழகத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்வெழுதினர். 

தேர்வுக்கான விடைகள் பட்டியல் சிபிஎஸ்இ இணையதளத்தில் மே 25-ஆம் தேதி வெளியிடப்பட்டன. மேலும் அந்தப் பட்டியலில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அதனை தெரிவிக்கும்படியும் அறிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசுப் பள்ளி மாணவா்கள் புத்தகப்பைகளை மைதானத்தில் வைத்து நூதன போராட்டம்

கடலூா் ஆட்சியா் அலுவலகத்துக்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்த பெண்

கடையநல்லூா், சங்கரன்கோவிலுக்கு ஆக. 6இல் எடப்பாடி பழனிசாமி வருகை!

காவல் அதிகாரி மீது அவதூறு: சிவகிரி காவலா் பணி நீக்கம்

இலவச அன்னதான திட்டம் தொடக்கம்

SCROLL FOR NEXT