இந்தியா

நீட் தேர்வு முடிவுகள் மதியம் 2 மணிக்கு வெளியீடு - சிபிஎஸ்இ அறிவிப்பு

நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று மதியம் 2 மணிக்கு வெளியாகும் என சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

DIN

மருத்துவப் படிப்புகளுக்கு நாடு முழுவதும் நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வு நாளை (செவ்வாய்கிழமை) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நீட் தேர்வு முடிவுகள் இன்றே (திங்கள்கிழமை) வெளியிடப்பட உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளர் அனில் ஸ்வரூப் ட்விட்டரில் இன்று காலை அறிவித்தார்.


இதனால், நீட் தேர்வு முடிவுகள் சற்று நேரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

இதையடுத்து, நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலங்களவை உறுப்பினர் ரங்கராஜன் அவசர மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. 

இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகள் இன்று மதியம் 2 மணிக்கு வெளியாகும் என மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சில்லறைப் பணவீக்கம் 1.33% ஆக உயர்வு

ஷிகர் தவானுக்கு மீண்டும் நிச்சயதார்த்தம்! விரைவில் 2-வது திருமணம்!

இரவில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

முதல் நாள் விசாரணை முடிந்து சிபிஐ அலுவலகத்தில் இருந்து வெளியேறிய Vijay!

டிசிஎஸ் 3வது காலாண்டு லாபம் 14% சரிவு!

SCROLL FOR NEXT