இந்தியா

பிரசவத்துக்காக ஏழு கிலோ மீட்டர் தொட்டிலில் தூக்கிச் செல்லப்பட்ட கர்ப்பிணி பெண்

கேரளாவில் பழங்குடி கர்ப்பிணிப் பெண் ஒருவர் பிரசவத்துக்காக ஏழு கிலோ மீட்டர் தொட்டிலில் தூக்கிச் செல்லப்பட்ட அவலம் நிகழ்ந்துள்ளது.

DIN

பாலக்காடு: கேரளாவில் பழங்குடி கர்ப்பிணிப் பெண் ஒருவர் பிரசவத்துக்காக ஏழு கிலோ மீட்டர் தொட்டிலில் தூக்கிச் செல்லப்பட்ட அவலம் நிகழ்ந்துள்ளது.

கேரளாவில் பாலக்காடுக்கு அருகில் அமைந்துள்ளது அட்டப்பாடி. இதனையொட்டியுள்ள வனப்பகுதியின் உள்ளே கொட்டாதாரா பழங்குடி இன மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கான மருத்துவமனை அட்டப்பாடியில் அமைந்துள்ளது. குடியிருப்பிலிருந்து இங்கு வந்து சேர்வதற்கு என்று முறையான பாதைகள் கிடையாது.அத்துடன் குறுக்கிடும் ஆற்றைக் சில இடங்களில் கடக்க என்று சாதாரண மூங்கில் பாலங்கள் மட்டுமே உள்ளது.  

இந்நிலையில் இந்தப் பகுதியில் பழங்குடி கர்ப்பிணிப் பெண் ஒருவர் பிரசவத்துக்காக ஏழு கிலோ மீட்டர் தொட்டிலில் தூக்கிச் செல்லப்பட்ட அவலம் நிகழ்ந்துள்ளது. 

இந்தப் பகுதியில் கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு நேற்று பிரசவ வலி எடுத்தது. அவரை உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதற்காக இங்குள்ளவர்கள் சோர்ந்து விடவில்லை. உடனடியாக மரக் கிளை ஒன்றை வெட்டி அதன்மீது போர்வையை இறுக்கிக் கட்டி தொட்டில் போன்ற அமைப்பை உருவாக்கினார்கள்.

அதற்குள் அந்த பெண்ணை வைத்து, அதனைச் சுமந்து கொண்டு சுமார் 7 கி.மீ தூரம் மலைப்பாதைகளில் பயணித்து, அவர்கள் அட்டப்பாடி வந்து சேர்ந்தனர். பின்னர் சற்றுத் தொலைவில் உள்ள பழங்குடி மக்களுக்கான மருத்துவமனையில் அப்பெண்ணை கொண்டு சேர்த்தனர். அங்கு அப்பெண் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

இந்த சம்பவம் புதனன்று கேரள தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானதுடன், சமூக ஊடங்களிலும் வைரலாகியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சைபர் மோசடியால் ரூ. 1.2 லட்சம் கோடியை இந்தியர்கள் இழப்பார்களா? நீங்களும் ஜாக்கிரதையாக இருங்கள்!

ஓவல் டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் இந்தியா 224 ரன்களுக்கு ஆட்டமிழப்பு!

பிரதமர் மோடி - ஓபிஎஸ் சந்திப்புக்கு ஏற்பாடு செய்வேன்: நயினார் நாகேந்திரன்

பழம்பெருமைமிகு இந்தியா... ஆயுர்வேதம், யோகா எப்படி வந்தன? | Ancient India

பறக்கும் ரயில் - சென்னை மெட்ரோவுடன் இணைக்கும் திட்டம்: ரயில்வே ஒப்புதல்!

SCROLL FOR NEXT