இந்தியா

ட்விட்டரில் டிரெண்ட் ஆகி வரும் ராகுல் காந்தி!

DIN

2019-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை மனதில் கொண்டு பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தீவிர கள பணிகளை செய்து வருகின்றனர். அதன் வரிசையில் காங்கிரஸ் தலீத், இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு மக்களின் ஆதரவை திரட்டும் வகையில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

அதன்படி இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு மக்களுக்கான தேசிய மாநாட்டில் ராகுல் காந்தி இன்று (திங்கள்கிழமை) பங்கேற்று பேசினார். தில்லியில் நடைபெற்ற இந்த மாநாட்டில் நாட்டில் உள்ள இதர பிற்படுத்தப்பட்டோர் தலைவர்கள் பலர் பங்கேற்றனர். 

இந்த கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி கோகோ கோலா நிறுவனத்தின் நிறுவனர் குறித்து பேசியுனார். அப்போது, அவர் பேசுகையில் 

"கோகோ கோலாவை நிறுவியது யார்? யாருக்காவது தெரியுமா? அவர் யார் என்று நான் சொல்கிறேன். கோகோ கோலா நிறுவனத்தை நிறுவியவர் முதலில் எலுமிச்சை சாறு விற்றவர். அவர் தண்ணீரில் சர்க்கரையை கலக்குவார். இந்த பரிசோதனை அனைவராலும் பாராட்டப்பட அதற்கு அங்கீகாரம் கிடைத்தது. இதையடுத்து, பணம் கிடைத்தது, நிறுவனம் தொடங்கப்பட்டது" என்றார்.  

ராகுல் காந்தியின் இந்த பேச்சு தற்போது ட்விட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது. 

உண்மையில், கோகோ கோலா நிறுவனத்தை நிறுவியது ஒரு அமெரிக்க மருத்துவர் என்பதை அறிந்து ட்விட்டர் வாசிகள் ராகுல் காந்தியை கலாய்த்து வருகின்றனர். 

இதன்மூலம், தற்போது இந்திய அளவில் #AccordingToRahulGandhi என்ற ஹேஷ்டேக்கில் ராகுல் காந்தி டிரெண்டிங்கில் உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT