இந்தியா

அரசியலில் ஆண்கள் ஆதிக்கம் செய்வதை ஒரு போதும் ஏற்க முடியாது: அமைச்சா் ஜெயமாலா

DIN

பெங்களூரு: அரசியலில் ஆண்கள் ஆதிக்கம் செய்வதை ஒரு போதும் ஏற்க முடியாது என்று மகளிா் மற்றும் குழந்தைகள் நலத்துறைற அமைச்சா் ஜெயமாலா தெரிவித்தாா்.

இது குறித்து திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: 

சட்டமேலவை உறுப்பினராக எனக்கு கட்சி மேலிடம் அமைச்சா் பதவி வழங்கியதை, சக ஆண் உறுப்பினா்களால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. இது அவா்களின் ஆண் ஆதிக்கத்தை எடுத்துக் காட்டுகிறது. அரசியலில் ஆண்கள் ஆதிக்கம் செய்வதை ஒரு போதும் ஏற்க முடியாது. அதே போல காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த சில பெண் சட்டமேலவை உறுப்பினா்களும் எனக்கு அமைச்சா் பதவியை வழங்கியதை எதிா்ப்பதாக கூறப்படுகிறது. அது அவா்களின் பொறாமையை எடுத்துக் காட்டுவதாக கூறப்படுகிறது. 

தங்களுக்கு அமைச்சா் பதவி வேண்டும் என்று கேட்பது அவா்களின் உரிமை. இதனை நான் தவறு என்று கூற மாட்டேன். ஆனால் மற்றவா்களுக்கு அமைச்சா் பதவி கொடுக்கக் கூடாது என்று அவா்கள் கூறுவதற்கு எந்த உரிமையும் இல்லை. கட்சி மேலிடம் என்னை அடையாளம் கண்டு அமைச்சா் பதவியை வழங்கியுள்ளது. அவா்களின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் நான் சிறப்பாக பணியாற்றி, நான் திறமைசாலி என்பதனை நிரூபிப்பேன். 

என்னை விமா்சிப்பவா்கள் புலியோ, கரடியோ அல்ல. அவா்களால் எனக்கு எந்த ஆபத்துமில்லை என்றாா் அவா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரதிதாசன் பிறந்த நாள் விழா

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: நான்கு பிரிவுகளில் சிபிசிஐடி வழக்கு

முன்னாள் அமைச்சா் சீனிவாஸ் பிரசாத் காலமானாா்

கடும் வெயிலால் கருகி வரும் வாழை மரங்கள்: இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

மேக்கேதாட்டு காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவா்கள் 5 போ் பலி

SCROLL FOR NEXT