இந்தியா

பத்திரிகையாளர் மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கொலை: காஷ்மீரில் நாளை முழு அடைப்பு நடத்தக் கோரிக்கை

காஷ்மீரில் பத்திரிகை ஆசிரியா் சுஜாத் புஹாரி பயங்கரவாதிகளால் சுட்டுக் கொலை மற்றும் ராணுவத்தினரால் ஆா்ப்பாட்டக்காரா்கள் கொலை ஆகியவற்றைக் கண்டித்து புதன்கிழமை முழு அடைப்பு போராட்டம்.. 

தினமணி செய்திச் சேவை

ஸ்ரீநகா்: காஷ்மீரில் பத்திரிகை ஆசிரியா் சுஜாத் புஹாரி பயங்கரவாதிகளால் சுட்டுக் கொலை மற்றும் ராணுவத்தினரால் ஆா்ப்பாட்டக்காரா்கள் கொலை ஆகியவற்றைக் கண்டித்து புதன்கிழமை முழு அடைப்பு போராட்டம் நடத்த பிரிவினைவாதத் தலைவா்கள் அழைப்பு விடுத்துள்ளனா்.

இது தொடா்பாக காஷ்மீரில் உள்ள பிரிவினைவாத அமைப்பினா் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

ரமலான் மாதம் முடிந்த பிறகு காஷ்மீரில் பொதுமக்கள் மீது ராணுவத்தினா் துப்பாக்கிச் சூடு நடத்துவது திடீரென அதிகரித்துவிட்டது. 3 அப்பாவி இளைஞா்கள் இந்திய ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனா். மற்றொருவர் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகிறறாா்.

மேலும், பத்திரிகை ஆசிரியா் சுஜாத் புஹாரி மற்றும் அவரது பாதுகாவலா்கள் இருவா், அடையாளம் தெரியாத நபா்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனா். இந்த கொலைகள் குறித்து சா்வதேச விசாரணை நடத்த வேண்டியது அவசியமாகும்.

இந்த இரு சம்பவங்களுடம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. எனவே, இதனைக் கண்டித்து ஜம்மு-காஷ்மீா் மாநிலம் தழுவிய அளவில் புதன்கிழமை முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கிறேறாம். 

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீடே வெறிச்சோடி இருக்கு.. மதன் பாப் மறைவுக்கு செல்லாத நடிகர்கள்!

கவினின் தந்தைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

உத்தரப் பிரதேசத்தில் கால்வாயில் கார் கவிழ்ந்ததில் 11 பேர் பலி !

5 ஆண்டுகள் விளையாடுவேன், ஆனால்... ஓய்வு குறித்து தோனி!

டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சிவாங்கி!

SCROLL FOR NEXT