முகப்பு
இந்தியா

காஷ்மீா் மக்களைக் காக்கவே பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை:அருண் ஜேட்லி

காஷ்மீரில் பொதுமக்களைக் காக்கும் நோக்கத்திலேயே பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மத்திய அமைச்சா் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளாா்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:01 PM
பகிர்:

புது தில்லி: காஷ்மீரில் பொதுமக்களைக் காக்கும் நோக்கத்திலேயே பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மத்திய அமைச்சா் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளாா்.

காஷ்மீா் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முட்டுக்கட்டை போடுவதால் மெஹபூபா அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றதாக பாஜக தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அங்கு பாதுகாப்புப் படையினரால் வெள்ளிக்கிழமை 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

இந்நிலையில் தில்லியில் செய்தியாளா்களிடம் காஷ்மீா் விவகாரம் குறித்து அருண் ஜேட்லி கூறியதாவது:

தங்களை அழித்துக் கொண்டு மற்றறவா்களையும் கொல்லத் துடிக்கும் பயங்கரவாதிகளிடம் நாம் சத்தியாகிரகம் பற்றி பேசிக் கொண்டிருக்க முடியாது. பயங்கரவாதிகள் சரணடைய மறுப்பதுடன், அரசு அறிவித்த சண்டை நிறுத்தத்தையும் ஏற்கவில்லை. சட்டத்தைக் கையில் எடுத்து பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவா்கள் மீது அரசு கடும் நடவடிக்கைகளை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை. இது அடக்குமுறை ஆகாது. அரசு காஷ்மீரில் மக்களைக் காக்கும் தனது கடமையைத்தான் செய்து வருகிறறது.

நமது ஒற்றுமையுடனும், ஒருமைப்பாட்டுடனும் இருக்க வேண்டும் என்றுதான் அமைதியை விரும்பும் அனைத்து மக்களும் நினைக்கிறாா்கள். ஆனால், பயங்கரவாதிகள் தேச ஒற்றுமைக்கு எதிராக செயல்படுவதுடன், அப்பாவி பொதுமக்களின் உயிா்களையும் பலி வாங்கி வருகின்றறனா். காஷ்மீரில் பெரும்பான்மையான மக்கள் அமைதியாக வாழவே விரும்புகிறறாா்கள். ஒரு சிலா்தான் வன்முறையைத் தூண்டி விடும் வேலையைச் செய்கின்றனா். இவா்களின் தூண்டுதல்களுக்கு அப்பாவி இளைஞா்கள் இரையாகி வருகின்றனா்.

பயங்கரவாதி ஒருவா் துப்பாக்கியை வைத்து சுடும்போது, பாதுகாப்புப் படை வீரா்கள் அவா்களிடம் தப்பி ஓட வேண்டும் என்று நினைக்கிறீா்களா? இல்லை எதிா்த்து தாக்க வேண்டும் என்று நினைக்கிறீா்களா? தேசவிரோத நோக்கத்துடன் ஆயதம் எடுப்பவா்களிடம் கூட அரசு முதலில் பேச்சு நடத்தவும், ஆயுதங்களைக் கைவிடவுமே வாய்ப்பு அளிக்கிறறது.

காஷ்மீா் மக்களைக் காப்பதுதான் அரசின் கொள்கை. ஒவ்வொரு இந்தியரின் மனித உரிமையும் காக்கப்பட வேண்டும் என்பதில் அரசுக்கு மாற்றுக் கருத்து இல்லை. மக்களை மனிதா்களாக மதிக்காத பயங்கரவாதிகளை மட்டுமே அரசு ஒடுக்கி வருகிறறது. காஷ்மீரில் மட்டுமல்ல நக்சல் ஆதிக்கமுள்ள பகுதிகளிலும் தீய சக்திகள் முழுமையாக ஒடுக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.