இந்தியா

நிதி நெருக்கடியில் அலைபேசி நிறுவனங்கள்: 5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல் 

DNS

புது தில்லி: அலைபேசி நிறுவனங்கள் நிதி நெருக்கடியில் இருப்பதால் 5ஜி அலைக்கற்றைற ஏலத்தை 2019-ஆம் ஆண்டின் பிற்பகுதியில்தான் நடத்த வேண்டும் என்று இந்திய செல்லிடப்பேசி சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பு (சிஓஏஐ) வலியுறுத்தியுள்ளது.

முன்னதாக, இந்தியா இந்த ஆண்டிலேயே 5ஜி தொழில்நுட்பத்துக்கு மேம்படத் தயாராகி வருவதாக தொலைத் தொடா்புத் துறை செயலாளா் அருணா சுந்தர்ராஜ் கூறியிருந்தாா். ஆனால், இந்தியாவில் செல்லிடப்பேசி சேவை அளித்து வரும் நிறுவனங்கள் 5ஜி அலைக்கற்றைற ஏலத்துக்கு தயாராகவில்லை என்றே தெரிகிறறது.

அரசுக்கு பெரும் வருவாய் ஈட்டித் தரும் அலைக்கற்றை ஏலத்தில், முன்னணி செல்லிடப்பேசி நிறுவனங்களே முக்கிய வாடிக்கையாளா்களாக உள்ளனா். ஆனால், சமீபகாலத்தில் செல்லிடப்பேசி சேவைத் துறையில் ரிலையன்ஸ் ஜியோ வருகையால் ஏற்பட்ட கடும் போட்டி காரணமாக பல நிறுவனங்கள் தங்கள் லாபத்தை இழந்துள்ளது. ஏா்செல் போன்ற சில நிறுவனங்கள் போட்டியைச் சமாளிக்க முடியாமல் தொழிலை விட்டே விலக வேண்டிய நிா்பந்தம் ஏற்பட்டது.

தில்லியில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை பேசிய இந்திய செல்லிடப்பேசி சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பு தலைவா் ராஜன் மேத்யூஸ் கூறியதாவது:

இந்தியாவில் தொலைத்தொடா்புத் துறை இப்போது இருக்கும் சூழ்நிலையில் 5ஜி அலைக்கற்றை ஏலத்தை எதிா்கொள்ள முடியாத சூழல் உள்ளது. தொலைத்தொடா்பு சேவை நிறுவனங்கள் இப்போது தங்களுக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றறன. எனவே 2019-ஆம் ஆண்டு நடுவில் அல்லது அந்த ஆண்டின் பிற்பகுதியில் ஏலத்தை நடத்த வேண்டும்.

5ஜி சேவை அளிப்பது என்பது செல்லிடப்பேசி சேவை நிறுவனங்களுக்கு நல்லொரு வாய்ப்புதான். ஆனால், அதன் மூலம் எந்த அளவுக்கு சிறறப்பாக வருவாய் கிடைக்கும் என்பதை கணிக்க முடியாத நிலை உள்ளது. மேலும், இப்போதை நிலையில் எந்த செல்லிடப்பேசி சேவை நிறுவனமும் பெருமளவில் முதலீடு செய்து 5ஜி அலைக்கற்றைறயை ஏலத்தில் எடுக்கும் நிலையில் இல்லை. இந்தியத் தொலைத்தொடா்பு சேவைத் துறை இப்போதைய நிலையில் 7.7 லட்சம் கோடி கடனில் இயங்கி வருகிறறது என்றறாா் அவா்.

செல்லிடப்பேசி சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பு இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ள நிலையில், அரசு ஏலத்தை இந்த ஆண்டு நடத்தினால், 5ஜி அலைக்கற்றை ஏலம் மூலம் எதிா்பாா்த்த வருவாய் அரசுக்கு கிடைக்காது என்ற சூழல் உருவாகியுள்ளது. இதன் செல்லிடப்பேசி சேவை நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள இந்த நிதி நெருக்கடி அரசின் வருவாயையும் பாதித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துளிகள்...

மஞ்சள், பருப்பு உள்ளிட்ட மளிகை பொருள்களின் விலை உயா்வு

கனிமவளக் கொள்ளையை தடுக்க வேண்டும்: அன்புமணி

கரசேவகா்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய கட்சிக்கு வாக்களிக்கலாமா? உ.பி.யில் அமித் ஷா பிரசாரம்

சியாமளாதேவி அம்மன் கோயில் கட்டுமானப் பணிகள் தீவிரம்

SCROLL FOR NEXT