முகப்பு
இந்தியா

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஜம்மு-காஷ்மீர் பயணம்

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, சனிக்கிழமை ஜம்மு-காஷ்மீர் சென்றுள்ளார்.

Updated On : 23 ஜூன், 2018 at 4:22 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:32 PM

ஜம்மு-காஷ்மீரில் பிடிபி கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக திரும்பப் பெற்றது. இதனால் மெஹபூபா முஃப்தி முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து அங்கு ஆளுநர் ஆட்சியை அமல்படுத்தி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த உத்தரவிட்டார்.

இந்நிலையில், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, சனிக்கிழமை ஜம்மு-காஷ்மீர் சென்றுள்ளார். அங்கு ஏற்பட்ட ஆட்சி கவிழ்ப்புக்குப் பிறகு அமித் ஷா தற்போது தான் முதன்முறையாக அங்கு செல்கிறார்.

இதையடுத்து அங்கு பாஜக-வின் இருசக்கர வாகனப் பேரணியில் விமான நிலையத்தில் இருந்து விடுதி வரை சென்றார். அங்கு கட்சியின் முக்கியப் பிரமுகர்களைச் சந்திக்கிறார். பின்னர் நடைபெறவுள்ள கட்சியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.