மழை வேண்டி அமைச்சர் முன்னிலையில் தவளைகளுக்கு டும் டும் டும்!
வறட்சியை போக்கவும், விவசாயத்தை பெருக்கும் விதமாகவும் மழை வேண்டி உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை தவளைகளுக்கு திருமணம் செய்யப்பட்டது.
வறட்சியைப் போக்கவும், விவசாயத்தை பெருக்கும் விதமாகவும் மழை வேண்டி உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை தவளைகளுக்கு திருமணம் செய்யப்பட்டது.
இருவேறு இடங்களில் நடைபெற்ற இந்த தவளைகள் திருமணத்தில் ஒன்றில் நிஜத் தவளைகளும், மற்றொன்றில் பிளாஸ்டிக் தவளைகளும் பயன்படுத்தப்பட்டன. இதில் ஒரு திருமணம் அந்த தொகுதி அமைச்சர் முன்னிலையில் நடைபெற்றது.
மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்ப்பூரில் மழை வேண்டி நடைபெற்ற தவளைத் திருமணத்தில் தான் அந்த தொகுதி அமைச்சர் லலிதா யாதவ் கலந்துகொண்டார். புண்டெல்காண்ட் பகுதியில் மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி இச்செயலைச் செய்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
Advertisement
அதுபோல உத்தரப் பிரதேசத்தில் நடந்த மற்றொரு நிகழ்வில் இரண்டு பிளாஸ்டிக் பொம்மைத் தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்தனர். இவ்விரு நிகழ்விலும் அப்பகுதியைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.