முகப்பு
செய்திகள்

பெண்கள் கருத்தரிக்க உதவும் 10 உணவுகள்!

பெண்கள் கருத்தரிக்க உதவும் உணவுகள் பற்றி...

Updated On : 24 ஏப்ரல், 2026 at 6:16 PM
கோப்புப் படம் - IANS
பகிர்:

பொதுவாக பெண்கள் திருமணம் ஆனவுடனே குழந்தை பெற்றுக்கொள்வது இப்போது குறைந்துவிட்டது. அதேபோல, மாறி வரும் வாழ்க்கைச் சூழலால் கருவுறுவது இப்போது சவாலானதாகவும் உள்ளது.

தாமதமான திருமணம், வாழ்க்கை முறை மாற்றங்களால் உடல்ரீதியான பிரச்னைகள், சிலர் கருவுறுதலை தள்ளிப்போடுவது என பல பிரச்னைகள் உள்ளன.

எனினும் ஆரோக்கியமான உணவு, லேசான உடற்பயிற்சி, உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பது ஆகியவற்றைப் பின்பற்ற வேண்டும் எனவும் கணவன், மனைவி இருவரும் போதிய பரிசோதனைகளை மேற்கொண்டு பிரச்னைகள் இருந்தால் மருத்துவரின் அறிவுரைப்படி சரிசெய்து பின்னர் கருவுற முயற்சிக்கலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

Advertisement

இந்நிலையில் கருத்தரிக்க உதவும் சில உணவுகளை நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

வால்நட் - இதில் ஒமேகா 3 அமிலம், கொழுப்பு அமிலங்கள், ஆன்டி - ஆக்சிஸ்டன்ட் நிறைந்திருப்பதால் இது கருவுறுதலுக்கு உதவுகிறது. தினமும் 75 கிராம் வால்நட் சாப்பிடும்போது விந்தணுக்களின் இயக்கம் அதிகரித்து கருவுறுதல் எளிமையாக நடக்கும் என்று 2012 ஆய்வு கூறுகிறது.

சாலமன் போன்ற மீன்களில் ஒமேகா 3 அமிலம் அதிகமுள்ளதால் அழற்சியைக் குறைத்து விந்தணுக்களின் இயக்கத்தை அதிகரிக்கும்.

சிட்ரஸ் பழங்கள் - திராட்சை, எலுமிச்சை, ஆரஞ்சு ஆகிய சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி அதிகமுள்ளதால் இது ஆன்டி - ஆக்ஸிடன்ட்டாக செயல்படும். இவற்றில் உள்ள பாலிஅமின்ஸ், ஆண் மற்றும் பெண் ஆகிய இருவருக்கும் இனப்பெருக்கத்தை வலுப்படுத்தும்.

பெர்ரிஸ் - ஸ்ட்ராபெர்ரி, ப்ளுபெர்ரி, ராஸ்பெர்ரி ஆகியவை கருமுட்டையின் வளர்ச்சிக்கும் விந்தணுவின் இயக்கத்திற்கும் உதவும்.

தக்காளி - இதில் வைட்டமின் ஏ, சி அதிகமாக இருக்கிறது. இது விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

சியா விதைகள் - இதிலும் ஒமேகா 3 அமிலங்கள், ஆன்டி ஆக்சிடன்ட், இரும்புச்சத்து, நார்ச்சத்து, மெக்னீசியம் அதிகம் இருப்பதால் ஹார்மோன் சமநிலையைப் பாதுகாக்கிறது. கருமுட்டை மற்றும் விந்தணுவின் தரத்தை அதிகரிக்கிறது.

பருப்பு வகைகள், பீன்ஸ் ஆகியவையும் கருவுறுதலுக்கு உதவுகிறது.

கோதுமை போன்ற முழு தானியங்கள் மற்றும் சிறு தானியங்கள் உடலில் சர்க்கரை அளவை சரியாக நிர்வகிக்கின்றன.

கெட்டி தயிர், சீஸ் ஆகியவற்றையும் அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

summary

These 10 foods boost fertility in women

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.