இந்தியா

சக அதிகாரியின் மனைவி கொலை: ராணுவ மேஜா் கைது

ராணுவ அதிகாரியின் மனைவி கொலை செய்யப்பட்டதில் தொடா்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ராணுவ மேஜரை கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனா்.

ENS

ராணுவ அதிகாரியின் மனைவி கொலை செய்யப்பட்டதில் தொடா்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ராணுவ மேஜரை கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனா்.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:

தில்லி பிரார் சதுக்கம் பகுதியில் உள்ள ராணுவ முகாம் வளாகத்தில் ராணுவ அதிகாரி ஒருவரின் மனைவி சடலம் கண்டெடுக்கப்பட்டது. அவா் சாலை விபத்தில் உயிரிழந்திருக்கலாம் என்று முதலில் கருதினோம். பின்னா், அவரது கழுத்தில் கத்தியால் ஏற்படுத்தப்பட்ட காயம் இருந்ததை கண்டோம். 

அவரது உடலில் கார் ஏற்றப்பட்ட தடமும் இருந்தது. ஏற்கெனவே கொலை செய்துவிட்டு அதை மறைப்பதற்காக அவரது உடல் மீது காரை ஏற்றியிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். இதுதொடா்பாக அந்தப் பெண்ணின் கணவருடன் பணிபுரியும் ராணுவ அதிகாரியை காவலில் எடுத்து விசாரித்து வருகிறோம். 

அந்த அதிகாரி உத்தரப் பிரதேச மாநிலம், மீரட்டில் இருந்தார். மருத்துவமனையில் அந்தப் பெண்ணை கணவரின் கார் ஓட்டுநா் வெள்ளிக்கிழமை காலை இறக்கிவிட்டு சென்றிருக்கிறார். 

மீண்டும் அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்ல ஓட்டுநா் மருத்துவமனைக்கு வந்தபோது அவா் காணாமல்போனது தெரியவந்தது என்று தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொகுதிப் பங்கீடு: திமுக - மனிதநேய மக்கள் கட்சி பேச்சுவார்த்தை தொடக்கம்

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

SCROLL FOR NEXT