இந்தியா

வாக்காளர்களுக்கு டிவி, ஃபிரிட்ஜ், ஸ்மார்ட்ஃபோன், நிலம், ரொக்கப் பணம்: இது வேற மாதிரி தேர்தல்!

தங்களுக்கு வாக்களிப்போருக்கு டிவி அல்லது ஃபிரிட்ஜ் அல்லது ஸ்மார்ட்ஃபோன் அல்லது ரொக்கமாக வழங்க ஆந்திரா மற்றும் தெலங்கானா பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிடுவோர் தயாராக உள்ளனர்.

ENS

தங்களுக்கு வாக்களிப்போருக்கு டிவி அல்லது ஃபிரிட்ஜ் அல்லது ஸ்மார்ட்ஃபோன் அல்லது ரொக்கமாக வழங்க ஆந்திரா மற்றும் தெலங்கானா பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிடுவோர் தயாராக உள்ளனர்.

ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர்களாக பயிற்சி பெற்று வருவோர், தங்களது வீடுகளுக்கு விலையுயர்ந்த பொருட்களை இலவசமாக வாங்கும் நேரம் வந்துவிட்டது.

தெலங்கானா மற்றும் ஆந்திர மாநில பார் கவுன்சில் தேர்தலில் வாக்காளர்களின் விலை மிக அதிக அளவில் உயர்ந்துள்ளது. ரொக்கப் பணம் முதல், டிவி, ஃபிரிட்ஜ், ஸ்மார்ட்ஃபோன், சுற்றுலா, மதுபான விருந்து என வாக்காளர்களின் விருப்பம் எதுவாக இருந்தாலும் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது.

இந்த பார் கவுன்சில் தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம் மிகப்பெரிய கௌரவம், அங்கீகாரம், மரியாதை கிடைக்கும். அதனால்தான், மிகப்பெரிய மனம் (பாக்கெட்) கொண்ட வழக்குரைஞர்கள், மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் அரசியல்வாதிகளை விடவும் அதிகம் செலவு செய்யத் தயாராக உள்ளனர்.

வரும் வெள்ளிக்கிழமை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகளைப் போல போட்டியிடும் வேட்பாளர்களைப் பொருத்து அவர்களது செலவிடும் தொகையும் ரூ.20 லட்சம் முதல் ரூ.3 கோடி அளவுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒரு சில வேட்பாளர்கள் தங்களுக்கு வாக்களிப்போருக்கு வீட்டு மனைகள் மற்றும் குடும்பத்தினருக்கும் சேர்த்து மருத்துவக் காப்பீடு திட்டங்களையும் வழங்குகிறார்கள்.

சில வேட்பாளர்கள், தங்களது வாக்காளர்களுக்கு மது விருந்து அளிக்க லாரி முழுக்க மதுபாட்டில்களை வரவழைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக, பரிசுப் பொருட்களை வழங்காமல் நியாயமாக தேர்தலை சந்திக்கும் சில வேட்பாளர்கள் பார் கவுன்சில் மற்றும் தேர்தல் தீர்ப்பாயத்திடமும் புகார்களை பதிவு செய்துள்ளனர்.

பார் கவுன்சில் தேர்தலில் வாக்காளர்களை பணம் கொடுத்து வாங்குவது மிகவும் துரதிருஷ்டவசமானது என்கிறார் பார் கவுன்சில் முன்னாள் உறுப்பினர் ஒருவர். கடந்த 20 ஆண்டுகளில் இதுபோன்ற நடைமுறைகளைப் பார்த்ததில்லை. இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் என்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Vijay full speech | வேலூரில் பேசும்போது கண்கலங்கிய விஜய்! | TVK | Vellore

'என் பின்னால் வராதீங்க' - கெஞ்சிக் கேட்ட விஜய்!

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

SCROLL FOR NEXT