இந்தியா

அமைச்சர் உள்ளிட்ட 7 எம்எல்ஏ-க்கள் சித்தராமையாவுடன் 'திடீர்' சந்திப்பு

கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவுடன் அமைச்சர் உள்ளிட்ட 7 எம்எல்ஏ-க்கள் திடீரென புதன்கிழமை சந்தித்தனர்.

ANI

கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவுடன் அமைச்சர் உள்ளிட்ட 7 எம்எல்ஏ-க்கள் திடீரென புதன்கிழமை சந்தித்தனர்.

கர்நாடக மாநிலத்தின் தெற்குப் பகுதியில் உள்ள பெல்தங்கடி எனும் மாவட்டத்தில் உடல்நலக் குறைவுக்கு முன்னாள் முதல்வர் சித்தராமையா, இயற்கை முறை சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவருடன் பல காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்து வரும் வேளையில், தற்போது கர்நாடக அமைச்சர் உள்ளிட்ட 7 எம்எல்ஏ-க்களின் இந்த சந்திப்பு அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தற்போதைய பேரவைத் தேர்தலுக்கு முன்பாக நடைபெற்றக் கூட்டத்தொடரில் அப்போதைய முதல்வராக இருந்த சித்தராமையா, பொது பட்ஜெட் தாக்கல் செய்தார். இதையடுத்து தற்போது முதல்வராக உள்ள குமாரசாமி, புதிய பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளார்.

இதனால் இருவருக்கும் பனிப்போர் ஏற்பட்டுள்ளதாகவும், இது மஜத, காங்கிரஸ் இடையிலான கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் தான் யாரிடமும் பிச்சை எடுத்தும், யாருடைய தயவிலும் முதல்வராகவில்லை என்று குமாரசாமி கூறியுள்ளது இரு கட்சிகளுக்கு இடையிலான விரிசலை உறுதிபடுத்தும் விதமாக சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்வி

தவெக ஆட்சி அமைந்தால்.... விஜய்யின் வாக்குறுதிகள்!

SCROLL FOR NEXT