இந்தியா

வங்கிகளின் வாராக் கடன்களின் சர்க்கஸ் வீரர்: பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரை கிண்டல் செய்யும்  சுவாமி! 

பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன்களின் சர்க்கஸ் வீரர் என்று பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரான கவுதம் அதானியை பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி கிண்டல் செய்து... 

IANS

புதுதில்லி: பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன்களின் சர்க்கஸ் வீரர் என்று பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரான கவுதம் அதானியை பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி கிண்டல் செய்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர் கவுதம் அதானி. இவரது அதானி குழுமமானது மின் உற்பத்தி, ரியல் எஸ்டேட், நிலக்கரி மற்றும் கம்மாடிட்டி வணிகம் உள்ளிட்ட துறைகளில் ஈடுபட்டுள்ளது. வணிக ஆய்வு நிறுவனங்களின் அறிக்கையின்படி அதானி குழுமமானது தங்களது பல்வேறு நிறுவனங்களின் வாயிலாக இந்தியாவின் பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் இருந்து 90 ஆயிரம் கோடிக்கு மேலாக கடன் பெற்றுள்ளது தெரிய வந்தது

இந்நிலையில் பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன்களின் சர்க்கஸ் வீரர் என்று கவுதம் அதானியை பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி கிண்டல் செய்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

இந்திய பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன்களின் ட்ரபீஸ் (ஒரு வகை சர்க்கஸ் விளையாட்டு) வீரர் கவுதம் அதானி. கடன்களுக்கு அவர் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் இல்லை என்றால் ஒரு பொது நல வழக்கை  தவிர்க்கவியலாது.

இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார். பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர் ஒருவரை சுவாமி கிண்டலுடன் எச்சரிக்கை செய்து பதிவிட்டிருப்பது ஆச்சர்யத்தினை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷியாவில் போா் முனையில் சிக்கியிருக்கும் தமிழா்களை மீட்க வேண்டும்: பிரதமரிடம் துரை வைகோ கோரிக்கை

280 காவல் நிலையங்கள் தரம் உயா்வு அரசாணை வெளியீடு

பிகாா் விவகாரம்: எதிா்க்கட்சிகள் தொடா் அமளி; மூன்றாவது வாரமாக முடங்கிய மக்களவை

காா் மோதியதில் உணவு விநியோக முகவா் உயிரிழப்பு

‘ஓரணியில் தமிழ்நாடு’ பிரசாரம்: ஓடிபி பெற உயா்நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிரான திமுக மேல்மறையீட்டு மனுவை விசாரிக்க மறுப்பு

SCROLL FOR NEXT