சட்டீஸ்கர்: நக்சலைட்டுகளின் கண்ணிவெடித் தாக்குதலில் 9 சிஆர்பிஎஃப் வீரர்கள் பலி
புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடியை நக்சலைட்டுகள் வெடிக்கச் செய்ததில் 9 சிஆர்பிஎஃப் வீரர்கள் பலியாகினர். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஐபுர்: புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடியை நக்சலைட்டுகள் வெடிக்கச் செய்ததில் 9 சிஆர்பிஎஃப் வீரர்கள் பலியாகினர். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
சட்டீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இது குறித்து சுக்மா காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது, 212வது பட்டாலியனைச் சேர்ந்த 12 சிஆர்பிஎஃப் வீரர்கள் கண்ணிவெடிகளைக் கண்டுபிடித்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் வந்த வாகனத்தைக் குறி வைத்து மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடியை நக்சலைட்டுகள் வெடிக்கச் செய்ததில் 9 பேர் பலியாகினர். உடனடியாக சம்பவப் பகுதிக்கு ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப்பட்டு காயமடைந்தவர்கள் ராய்புர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
Advertisement
கிஸ்தாராம் - பலோடி சாலையில் இன்று மதியம் 12.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.