முகப்பு
இந்தியா

அதிகமான ஆர்டிஐ விண்ணப்பங்களை பதில் சொல்லாமல் நிராகரித்தத் துறை இதுதான்!

பணமதிப்பிழக்கம் நடவடிக்கை எடுக்கப்பட்ட 2016-17ம் ஆண்டில் மத்திய நிதித்துறை அமைச்சகத்துக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அதிக அளவு விண்ணப்பங்கள் வந்ததாக மத்திய தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Updated On : 17 மார்ச், 2018 at 11:28 AM
பகிர்:


புது தில்லி: பணமதிப்பிழக்கம் நடவடிக்கை எடுக்கப்பட்ட 2016-17ம் ஆண்டில் மத்திய நிதித்துறை அமைச்சகத்துக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அதிக அளவு விண்ணப்பங்கள் வந்ததாக மத்திய தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அதிக விண்ணப்பங்கள் வந்த மத்திய அமைச்சகங்கள் மற்றும் மத்தியத் துறைகளின் பட்டியலை மத்திய தகவல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அந்த வகையில், மத்திய நிதித்துறை அமைச்சகத்துக்கு 2016-17ம் நிதியாண்டில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 1,51,186  விண்ணப்பங்கள் வரப்பெற்றதாகவும், அதில் 27,833 விண்ணப்பங்களை அமைச்சகம் நிராகரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, பிரதமர் அலுவலகம் ஆகியவை தங்களுக்கு வந்த விண்ணப்பங்களில் 10 சதவீதம் அளவு விண்ணப்பங்களை நிராகரித்துள்ளன.

அதே போல, அடிப்படைக் காரணம் இல்லாமல் விண்ணப்பங்களை நிராகரிப்பது மற்றும் காரணம் இல்லாமல் காலம் தாழ்த்துவது போன்ற காரணங்களுக்காக ரூ.18.97 லட்சம் அளவுக்கு மத்திய தகவல் ஆணையம் மத்திய அமைச்சகங்களுக்கு அபராதமும் விதித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.