இந்தியா

நம்பிக்கையில்லா தீர்மானத்தை சந்திக்க பாஜக தயார்: மத்திய அமைச்சர் அனந்த் குமார்

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை சந்திக்க தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் அனந்த் குமார்திங்கள்கிழமை கூறினார்.

Raghavendran

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பான விவகாரத்தில் மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான பாஜக அரசை எதிர்த்து நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆந்திர மாநில எதிர்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி கொண்டு வந்தது.

மேலும், இவ்விவகாரத்தில் மத்திய தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்தார். இதையடுத்து அவர்கள் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் ராஜிநாமா செய்தனர். 

இந்நிலையில், பாஜக-வுக்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை சந்திக்க தயாராக இருப்பதாக மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்த் குமார் கூறியதாவது:

மத்திய பாஜக அரசுக்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை சந்திக்க நாங்கள் எந்நேரமும் தயாராக இருக்கிறோம். அதில் நாங்கள் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையும் எங்களுக்கு உள்ளது என்றார்.

முன்னதாக, மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிப்பது தொடர்பாக பெரும்பாலான எதிர்கட்சிகள் முடிவெடுத்துள்ளன. இதில் கம்யூனிஸ்ட் கட்சியும் தற்போது இணைந்துள்ளது. இருப்பினும் இந்த வாக்கெடுப்பில் இருந்து விலக சிவசேனா கட்சி முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடியுடன் உலகக் கோப்பை வென்ற மகளிர் அணியினர் - புகைப்படங்கள்

தில்லியில் பிரதமர் மோடி தலைமையில் நவ. 7இல் ‘வந்தே மாதரம்’ 150-ஆவது ஆண்டு கொண்டாட்டம்!

இதுபோன்ற துன்பம் எனக்கு முதல்முறை அல்ல; அத்துமீறிய நபர் மீது மெக்சிகோ அதிபர் புகார்!

தில்லியில் மோசமான நிலையில் காற்றின் தரம் - புகைப்படங்கள்

பார்த்த விழி... பாயல் தாரே!

SCROLL FOR NEXT