இந்தியா

பாஜகவுக்கு ஆதரவாகவே நாடாளுமன்றத்தினை முடக்கும் நாடகம்: அதிமுக மீது சமாஜ்வாதி எம்.பி  குற்றச்சாட்டு! 

நம்பிக்கையில்லா தீர்மானத்தினை கொண்டு வரக்கூடாது என்பதற்காக பாஜகவுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தினை முடக்கும் நாடகத்தினை அதிமுக நடத்துவதாக, சமாஜ்வாதி எம்.பி குற்றம் சாட்டியுள்ளார்.

DIN

புதுதில்லி: நம்பிக்கையில்லா தீர்மானத்தினை கொண்டு வரக்கூடாது என்பதற்காக பாஜகவுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தினை முடக்கும் நாடகத்தினை அதிமுக நடத்துவதாக, சமாஜ்வாதி எம்.பி குற்றம் சாட்டியுள்ளார்.

காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து, நாடாளுமன்றத்தினை அதிமுக கடந்த 11 நாட்களாக முடக்கி வருகிறது. அவைக்கு உள்ளும் வெளியேயும் போராட்டம் நடத்தி வருகிறது.

இந்நிலையில் ஆளும் பாஜக அரசுக்கு எதிர்ப்பு தெர்வித்து அரசு மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வருவது என்று தெலுங்கு தேசம் கட்சி முடிவு செய்தது. அவ்வாறு ஞாயிறன்று கொண்டு வரப்பட்ட தீர்மானம்   எதிர்க்கட்சிகளின் கூச்சல் குழப்பத்தால் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

இந்நிலையில் திங்களன்று மீண்டும் அவை கூடிய பொழுது மறுபடியும் அந்த தீர்மானம் கொண்டு வரப்பட்ட ழுதும் கூச்சல் குழப்பம் நிலவியது. அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அவை நாள் முழுவதும் ஓத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தினை கொண்டு வரக்கூடாது என்பதற்காக பாஜகவுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தினை முடக்கும் நாடகத்தினை அதிமுக நடத்துவதாக, சமாஜ்வாதி எம்.பி ராம்கோபால் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆனால் தாங்கள் இதற்கு முன்பே போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக சமாஜ்வாதி எம்.பியின் குற்றச்சாட்டுக்கு அதிமுக எம்.பி அருண்மொழித் தேவன் மறுப்புத் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மானாமதுரையில் இன்று மின் தடை

சிறுநீரக மோசடி: தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்தது உயா்நீதிமன்றம்

பஜாஜ் ஃபைனான்ஸ் கடனளிப்பு 27% உயா்வு

அக்டோபரில் 5 மாத உச்சம் தொட்ட பெட்ரோல் விற்பனை

பந்தன் வங்கியின் வருவாய் ரூ.1,310 கோடியாகச் சரிவு

SCROLL FOR NEXT