இந்தியா

நீதிபதி ஜோசப் பதவி உயர்வு: உச்ச நீதிமன்ற கண்காணிப்புக் குழு இன்று முடிவு

பதவி உயர்வு தொடர்பாக நீதிபதி ஜோசப் பெயரை பரிந்துரைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்ற கண்காணிப்புக் குழுக் கூட்டம் புதன்கிழமை முடிவெடுக்கிறது.

Raghavendran

நீதிபதி ஜோசப், உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெறுவது குறித்து முடிவெடுக்கும் விதமாக உச்ச நீதிமன்ற கண்காணிப்புக் குழுக் கூட்டம் புதன்கிழமை கூடுகிறது. 

உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக உத்தரகண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப்-க்கு பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக கண்காணிப்புக் குழு மத்திய அரசுக்கு கடந்த வாரம் பரிந்துரை செய்தது. ஆனால், இந்த பரிந்துரையை மறு ஆய்வு செய்யுமாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

இதனிடையே உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ராவுக்கு நீதிபதியாக பதவி உயர்வு வழங்கி அனுமதி அளித்துள்ளது. எனவே இந்து மல்ஹோத்ரா, ஏப்ரல் 27-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்டார். மேலும், பார் கௌன்சிலால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் வழக்கறிஞர் என்ற பெருமையைப் பெற்றார்.

இந்நிலையில், புதன்கிழமை கூடும் இந்த கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் நீதிபதி கே.எம்.ஜோசப் பெயரை உச்ச நீதிமன்ற நீதிபதயாக பதவி உயர்வு வழங்க மீண்டும் பரிந்துரை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கண்காணிப்புக் குழுவில் உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளான தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஜெ.செலமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி.லோகுர் மற்றும் குரியன் ஜோசப் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசியலமைப்பின் மீது அக்கறை இருப்பதாக பாஜக-ஆர்எஸ்எஸ் பாசங்கு: கார்கே!

தேசியவாத சிந்தனையை ஏற்க வழிகாட்டும் அரசியலமைப்புச் சட்டம்! குடியரசுத் தலைவர்

காது கேட்கவில்லையா? அலட்சியம் வேண்டாம்! உங்கள் மூளையைப் பாதிக்கலாம்!!

ராய சிம்மாசனம்

பாரதிய நீதிச் சட்டம்

SCROLL FOR NEXT