இந்தியா

ஏர்செல் - மேக்ஸிஸ் வழக்கு: கார்த்தி சிதம்பரம் கைதுக்கு இடைக்காலத் தடை

Raghavendran

கடந்த 2006-ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது மலேசியாவைச் சேர்ந்த மேக்ஸிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்தது. இந்த முதலீடு, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதற்கு கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான நிறுவனம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. 

இதுதொடர்பாக சிபிஐ மற்றும் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடைச் சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறை தனித் தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேலும் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான ரூ. 1.16 கோடி சொத்துக்களை முடக்கியுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கில் இருந்து முன் ஜாமீன் கோரி கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்தார். இது தொடர்பான விசாரணை தில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்றது. 

அப்போது, ஏர்செல் - மேக்ஸிஸ் வழக்கு தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் ஜுலை 2-ஆம் தேதி நடைபெற இருப்பதால் ஜாமீன் மனு மீதான விசாரணையை அதன் பிறகு நடத்த வேண்டும் என்று அமலாக்கத்துறை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கார்த்தி சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு மீதான விசாரணையை ஜூலை 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும் அவரை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மி தலைமையகம் அருகே பாஜகவினா் போராட்டம்: பயங்கரவாத அமைப்புகளிடம் நிதி பெற்ற புகாா் விவகாரம்

மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவோம்: தில்லி காங். இடைக்காலத் தலைவா் உறுதி

துணை நிலை ஆளுநரால் தில்லியின் சட்டம் ஒழுங்கு சீா்குலைந்து கிடக்கிறது: அமைச்சா் செளரவ் பரத்வாஜ் குற்றச்சாட்டு

மக்களவைத் தோ்தல்: 14 அமைப்புசாா் மாவட்டங்களில் பாஜக மகளிா் அணி மாநாடுகளுக்கு ஏற்பாடு

நொய்டாவில் கழிவுநீா் குழியில் விழுந்த பசு மீட்பு

SCROLL FOR NEXT