முகப்பு
இந்தியா

ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமளிக்கக் கூடாது: பிரதமர் நரேந்திர மோடி

ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமளிக்கக் கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடி பாஜக உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வில் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

Updated On : 7 மே, 2018 at 11:02 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:29 PM

கர்நாடக தேர்தல் தொடர்பாக அங்கு பாஜக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக அக்கட்சித் தலைவர் அமித்ஷா, பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா ஆகியோர் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், பாஜக உறுப்பினர்களிடைய கர்நாடக தேர்தல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, நமோ செயலி மூலமாக பேசியதாவது:

ஜனநாயகத்தில் எவ்வகையிலும் வன்முறைக்கு இடமளிக்கக் கூடாது. வன்முறை காரணமாக கர்நாடகத்தில் பாஜக தொண்டர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். அரசியல் மற்றும் பொது வாழ்வில் எந்தவொரு பிரச்னைக்கும் பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண வேண்டும், மாறாக வன்முறையை நாடக்கூடாது.

Advertisement

இங்கு ஏற்பட்டுள்ள பாஜக தொண்டர்கள் மீதான வன்முறைக்கு பழிவாங்கும் நடவடிக்கையில் பாஜக இளைஞர் அமைப்பு உறுப்பினர்கள் யாரும் ஈடுபடக் கூடாது என்று நான் கேட்டுக்கொள்கிறேன். எதிர்கட்சியான காங்கிரஸ் ஆதார் முதல் மிண்ணனு வாக்கு இயந்திரம் வரை அனைத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால், தொழில்நுட்பத்தின் பயன்பாட்டினை பாஜக ஊக்குவித்து வருகிறது.

கர்நாடக தேர்தல் மீதான மக்களின் ஈடுபாட்டைக் கண்டு நான் வியக்கிறேன். இங்குள்ள அனைத்து மக்கள் பிரச்னைகளின் அடிப்படை தேவைகள் முதல் பாஜக தொடர்ந்து போராடி வருகிறது. நாட்டில் ஏற்பட்டுள்ள வேலைவாய்ப்பின்மைக்கு முன்னாள் காங்கிரஸ் அரசாங்கம் தான் முக்கிய காரணம். தரமான கல்வி மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்க பாஜக முழு கவனம் செலுத்தி வருகிறது என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.