இந்தியா

காஷ்மீர் கல்வீச்சு சம்பவத்தில் சென்னை இளைஞர் பலி: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம் 

காஷ்மீரில் பிரிவினைவாதிகள் நடத்திய கல்வீச்சு சம்பவத்தில் சென்னை இளைஞர் பலியானதற்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

DIN

புதுதில்லி: காஷ்மீரில் பிரிவினைவாதிகள் நடத்திய கல்வீச்சு சம்பவத்தில் சென்னை இளைஞர் பலியானதற்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில்  சில நாட்களுக்கு முன்னர் 5 ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். தவிர பொதுமக்களில் ஒருவரும் இறந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து பிரிவினைவாதிகள் திங்கட்கிழமை முழு அடைப்புப் போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

அப்பொழுது ஸ்ரீநகரின் புறநகர் பகுதியான நர்பாலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. பாதுகாப்புப் படையினர் மீது நடத்தப்பட்ட கல்வீச்சு தாக்குதலில், காஷ்மீருக்கு சுற்றுலா வந்த சென்னை இளைஞர் ஆர்.திருமணி (22) தலையில் படுகாயம் அடைந்தார்.

பாதுகாப்புப் படையினர் அவரை உடனடியாக ஸ்கிம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரிவினைவாதிகள் நடத்திய கல்வீச்சு சம்பவத்தில் சென்னை இளைஞர் பலியானதற்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தில்லி சானா பவனில் செவ்வாயன்று நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றில் நிர்மலா சீதாராமன் பேசும்போது கூறியதாவது:

இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது. பயங்கரவாதிகள் வலிமையாக இருப்பதற்கு பாதுகாப்புப் படைகள் பொறுப்பேற்க முடியாது. காஷ்மீர் முதல்வர் மெகபூபா  முஃப்தி தனது மாநிலத்துக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால், காஷ்மீர் கல்வீச்சு சம்பவத்தில் ஒரு சுற்றுலாப் பயணி காயப்பட்டு  இறந்திருக்கிறார். எனவே காஷ்மீர் அரசு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிலாஸ்பூரில் சரக்கு ரயில்- பயணிகள் ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு, 20 பேர் காயம்

பெண் தொழிலாளிகளின் குளியலறையில் ரகசிய கேமரா! வடமாநில இளம்பெண் கைது!

நான்கரை மணிநேரம், 100 காவலர்கள்... மாணவியைக் கண்டுபிடிக்காதது ஏன்? இபிஎஸ் கேள்வி

ஆளுங்கட்சி உறுப்பினரின் குடும்பத்தினர் மூவர் சடலமாக மீட்பு! போலீஸார் விசாரணை

இந்திய வீராங்கனைகள் ஸ்மிருதி, ஜெமிமா, ராதாவுக்கு தலா ரூ. 2.25 கோடி; பயிற்சியாளருக்கு ரூ. 22.5 லட்சம்! - மகாராஷ்டிர அரசு

SCROLL FOR NEXT