இந்தியா

சட்டப்படி திருமணம் செய்துகொண்ட மாற்று பாலின காதலர்கள்: கேரளாவில் முதன்முறையாக சம்பவம் 

DIN

திருவனந்தபுரம்: கேரளாவில் மாற்று பாலின காதலர்கள் முதன்முறையாக சட்டப்படி திருமணம் செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் இஷான். பெண்ணாகப் பிறந்து பின்னர் மருத்துவ சிகிச்சை மூலமாக ஆணாக மாறியவர். அதே போல் ஆணாகப் பிறந்த சூர்யா தனக்குள் ஏற்பட்ட பெண்மையை உணர்ந்து  பெண்ணாக மாறியவர். இவர்கள் இருவரும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் அறிமுகமானார்கள்.

ஆரம்பத்தில் நண்பர்களாக பழகிய இவர்கள் நாட்கள் செல்லச் செல்ல காதலர்களாக மாறியுள்ளனர். சூர்யா தனது மனைவியாக வந்தால், தனது வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என எண்ணிய இஷான், தனது காதலை சூர்யாவிடம் தெரிவித்துள்ளார். இதற்கு சூர்யாவும் உடனே சம்மதம் தெரிவித்துவிட்டார்.

இவர்களது முடிவுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்துவிட்டனர். அதனைத் தொடர்ந்து நண்பர்கள் அனைவரது முன்னிலையிலும் இவர்களது திருமணம் வியாழன் அன்று கோலாகலமாக நடைபெற்றுள்ளது. கேரளாவில் மாற்று பாலின காதலர்கள் முதன்முறையாக சட்டப்படி திருமணம் செய்துகொண்டது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு எச்சரிக்கை!

தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

உலகளாவிய பெருமை பெற்றது திருக்குறள்: உயர்நீதிமன்ற நீதியரசர் ஆர்.சுரேஷ்குமார்

தீவிர புயலாக வலுப்பெற்றது ரீமெல்!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் தேரோட்டம்!

SCROLL FOR NEXT