இந்தியா

காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு ஹாட்ரிக் தோல்வி: ராஜ்யவர்தன் ராத்தோர்

பாஜக பின்னர் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் நிலைக்கு 121 தொகுதிகள் வரை முன்னிலைப் பெற்று வருகிறது. 

Raghavendran

கர்நாடக சட்டப் பேரவைக்கு மே 12-ஆம் தேதி தேர்தல் நடந்தது. மாநிலத்தில் மொத்தமுள்ள 224 தொகுதியில் 2 தொகுதியை தவிர்த்து 222 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 72.13 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்குகள் எண்ணும் பணி மே 15-ஆம் தேதி (இன்று) காலை 8 மணிக்கு தொடங்கியது. 

தொடக்கத்தில் பின்தங்கிய பாஜக பின்னர் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் நிலைக்கு 121 தொகுதிகள் வரை முன்னிலைப் பெற்று வருகிறது. அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். சாமுண்டீஸ்வரி தொகுதியில் முதல்வர் சித்தராமையா 17 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளார்.

இந்நிலையில், மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் ராத்தோர் கூறுகையில்,

காங்கிரஸ் தலைவராக ராகுல் பொறுப்பேற்றது முதல் இது அவருக்கு 3-ஆவது நேரடித் தோல்வி. இதில் நான் தான் அடுத்த பிரதமர் வேட்பாளர் என்று தெரிவித்து வருகிறார் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீண்டும் மகாபாரதம்! நாள்தோறும் காலை ஒருமணி நேரம் ஒளிபரப்பாகிறது!

பெத் மூனி அதிரடி: இந்தியாவை வீழ்த்தி ஆஸி. அபார வெற்றி!

எம். ஆர். ராதா மகள் என்பதை நிரூபித்திருக்கிறேன்: ராதிகா சரத்குமார்

புதிய தொடரில் மீண்டும் ஜோடி சேரும் பாக்கியா - கோபி ஜோடி!

ஒருநாள், டெஸ்ட் தொடர்களுக்காக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸி.!

SCROLL FOR NEXT