இந்தியா

பாஜக எம்எல்ஏ-க்கள் 6 பேர் எங்களுடன் பேசி வருகின்றனர்: காங்கிரஸ் தலைவர் எம்.பி.பாடீல்

பாஜக-வைச் சேர்ந்த 6 எம்எல்ஏ-க்கள் தங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ் முக்கியத் தலைவர் எம்.பி.பாடீல் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

Raghavendran

பாஜக-வைச் சேர்ந்த 6 எம்எல்ஏ-க்கள் தங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ் முக்கியத் தலைவர் எம்.பி.பாடீல் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத சூழலில் ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. அங்கு ஆட்சி அமைப்பது தொடர்பாக பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா, ஆளுநரைச் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார். அதுபோல மஜத, காங்கிரஸ் கூட்டணியும் கோரிக்கை வைத்துள்ளது.

எனவே ஆட்சி அமைப்பது தொடர்பாக பெரும்பான்மையை நிரூபிக்கும் விதமாக எம்எல்ஏ-க்களின் ஆதரவைப் பெரும் வகையில் பாஜக, காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. 

இந்நிலையில், பாஜக எம்எல்ஏ-க்கள் தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக காங்கிரஸ் முக்கியத் தலைவர் எம்.பி.பாடீல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

இங்கு காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏ-க்கள் அனைவரும் ஒற்றுமையாக உள்ளனர். எங்கள் எம்எல்ஏ-க்கள் கட்சி மாறுவதாக வரும் தகவல்கள் எல்லாம் வதந்தியாகும். ஆனால் பாஜக-வைச் சேர்ந்த 6 எம்எல்ஏ-க்கள் எங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT