இந்தியா

தேவகௌடாவிடம் தொலைபேசியில் பேசினாரா மோடி? பரபரப்பான சூழ்நிலையில் பிறந்தநாள் வாழ்த்து

DIN

மதச்சார்பற்ற ஜனதா தள கட்சித் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகௌடாவின் பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். 

மதச்சார்பற்ற ஜனதா தள கட்சித் தலைவர் தேவகௌடா இன்று (வெள்ளிக்கிழமை) பிறந்தநாள் கொண்டாடுகிறார். இந்நிலையில், அவருக்கு வாழ்த்து தெரிவித்ததாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியது, "முன்னாள் பிரதமர் தேவகௌடாவிடம் பேசி பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தேன். அவர் ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழ பிரார்த்திக்கிறேன்" என்றார். 

கர்நாடகாவில் எடியூரப்பா நேற்று (வியாழக்கிழமை) ஆட்சி அமைத்ததை அடுத்து, அவர் 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அதனால், காங்கிரஸ் மற்றும் மஜத சட்டப்பேரவை உறுப்பினர்கள் பாஜகவால் குதிரைப் பேரம் மூலம் விலைக்கு வாங்கப்படலாம் என்ற கணிக்கப்பட்டது.    

அதனால், காங்கிரஸ் மற்றும் மஜத சட்டப்பேரவை உறுப்பினர்களை கட்சி மேலிடம் பெங்களூருவில் இருந்து ஹைதராபாத்துக்கு அழைத்துச் சென்று பாதுகாப்பாக வைத்துள்ளது. 

இந்த பரபரப்பான சூழ்நிலையில், மஜத கட்சி தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகௌடாவிடம் பிரதமர் மோடி பேசியதாக கூறியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அவர், தேவகௌடாவிடம் தொலைபேசியில் அழைத்து பேசியிருக்கலாம் என்று தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT