இந்தியா

ஜம்மு காஷ்மீர் வளர்ச்சிக்காக ரூ.25000 கோடியில் திட்டங்கள்: பிரதமர் மோடி உறுதி 

ANI

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநில வளர்ச்சிக்காக ரூ.25000 கோடியில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சனிக்கிழமை பல்வேறு நலத் திட்டங்களை தொடங்கி வைக்கும் பொருட்டு பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார். லடாக் பகுதியில் உள்ள லே விமான நிலையத்தில் அவரை மாநில ஆளுநர் வோரா மற்றும் முதல்வர் மெஹபூபா முப்தி ஆகிய இருவரும் வரவேற்றனர் 

தனது பயணத்தின் ஒரு பகுதியாக லே பகுதியில் நடைபெற்ற புகழ்பெற்ற புத்த மத்தத துறவி  குஷோக் பாகுலா ரின்போபேவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

அப்பொழுது அவர் பேசியதாவது:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் விவசாய வளர்ச்சிக்கு பெரும் வாய்ப்பு உள்ளது. பூரணமான ஆரோக்கிய சேவை துறையில் வளர்ச்சிக்கு உதவுவதில் இம்மாநிலம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜம்மு காஷ்மீர் மாநில வளர்ச்சிக்காக ரூ.25000 கோடியில் திட்டங்கள் தொடங்கப்படும். இந்த வளர்ச்சித் திட்டங்களின் காரணமாக மக்கள் பயனடைவார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

இன்றைய ராசி பலன்கள்!

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

SCROLL FOR NEXT