இந்தியா

கர்நாடக அரசியலில் தீராத குழப்பம்: பாஜக தற்போது செய்ய வேண்டியது என்ன?

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்தும், குழப்பம் இன்னும் தீர்ந்தபாடில்லை. காங்கிரஸ் - மஜத கூட்டணி கட்சி நாளை கர்நாடகாவில் பதவியேற்க உள்ளது.

ENS

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்தும், குழப்பம் இன்னும் தீர்ந்தபாடில்லை. காங்கிரஸ் - மஜத கூட்டணி கட்சி நாளை கர்நாடகாவில் பதவியேற்க உள்ளது.

கர்நாடக முதல்வராக மஜத தலைவர் குமாரசாமி பதவியேற்க உள்ளார்.

கர்நாடகாவில் பாஜக பதவியேற்றும், தன்னால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் முதல்வர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்தார். இதையடுத்து கூட்டணி கட்சியை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார்.

இதோடு கர்நாடகாவில் இழுபறி முடிவுக்கு வரும் என்று நினைத்திருந்தவர்களுக்கு அது பொய்யென தெரிய வந்தது எப்போது தெரியுமா? கூட்டணி கட்சிகளுக்குள் இன்னமும் அமைச்சரவை முடிவாகாத போதுதான்.

இந்த நிலையில், காங்கிரஸ் - மஜத எம்எல்ஏக்களும், கட்சித் தலைவர்களும் அமைச்சரவையில் இடம்பெற போட்டியிடும் சண்டையை பாஜக வெறுமனே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

காங்கிரஸ் - மஜத கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே ஏராளமான கருத்து வேறுபாடுகளும், மோதல்களும் உள்ளன. இதனால், இந்த கூட்டணி அதிக நாட்களுக்கு நீடிக்காது என்று மத்திய இணை அமைச்சர் டி.வி. சதானந்தா கூறியுள்ளார்.

பாஜகவுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியில் இருந்து எம்எல்ஏக்களை இழுக்க முயன்ற பாஜக தலைவர்களில் ஒருவரும், முன்னாள் பாஜக அமைச்சர் கூறுகையில், சில பழிவாங்கும் நடவடிக்கைகள், நானா? நீயா? யார் பெரியவர் என்ற ஈகோ பிரச்னை போன்றவற்றால் கர்நாடகாவில் அமையும் கூட்டணி ஆட்சி 3 மாதத்துக்கு மேல் நீடிக்காது என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே, ஜெயாநகர் மற்றும் ஆர்ஆர் நகர் தொகுதிகளில் நடைபெறும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான பணிகளில் ஈடுபடுமாறு கட்சித் தொண்டர்களுக்கு எடியூரப்பா அறிவுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் கணக்கு!

SCROLL FOR NEXT