முகப்பு
இந்தியா

குமாரசாமி பதவியேற்புக்கு நீளும் வரவேற்பு பட்டியல்

பெங்களூரு விதான் சௌதாவில் நடக்கும் விழாவில், காங்கிரஸ் தலைவர் ராகுல் மற்றும் சோனியா ஆகியோர் கலந்துகொள்கின்றனர். 

Updated On : 22 மே, 2018 at 8:56 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:36 PM

கர்நாடக மாநில முதல்வராக வரும் புதன்கிழமை (மே 23) மாலை 4.30 மணிக்கு, மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) தலைவர் குமாரசாமி பதவியேற்கவுள்ளார்.  பெங்களூரு விதான் சௌதாவில் நடக்கும் விழாவில், குமாரசாமிக்கு கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலா, பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைக்கவுள்ளார். பதவியேற்பு விழாவையொட்டி, காங்கிரஸ் தலைவர் ராகுல் மற்றும் சோனியா ஆகியோர் கலந்துகொள்கின்றனர். 

இவ்விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தில்லி முதல்வர் கேஜரிவால், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோரும் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, ராஷ்ட்ரீய ஜனதாதளத் தலைவர் தேஜஸ்வி யாதவ், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 
 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.