FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

பள்ளிச்சட்டம்பி படத்துக்கு பெருகும் வரவேற்பு! 2 நாளில் வெற்றியை அறிவித்த படக்குழு!

பள்ளிச்சட்டம்பி திரைப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் குறித்து...

Updated On : 17 ஏப்ரல் 2026, 5:39 pm IST
பள்ளிச்சட்டம்பி படத்தில் நடிகர் டொவினோ தாமஸ்...
பகிர்:

நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் வெளியான பள்ளிச்சட்டம்பி திரைப்படத்தின் வெற்றி டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

மலையாள நடிகர் டொவினோ தாமஸ் மற்றும் இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி கூட்டணியில் வெளியான புதிய படம் “பள்ளிச்சட்டம்பி”. இப்படத்தில், நடிகை கயாது லோஹர் நாயகியாக நடித்துள்ளார்.

1980-களில் கிறிஸ்துவ தேவாலயத்தின் பாதுகாப்பிற்காக ஊருக்குள் அழைத்து வரப்படும் நாயகனை மையமாகக் கொண்டு உருவான இப்படத்தில், பிரபல நடிகர் பிருத்விராஜ் சுகுமாறன் சிறப்புத் தோற்றத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

Advertisement

Advertisement

இதனைத் தொடர்ந்து, மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே கடந்த ஏப். 15 அன்று வெளியான இந்தப் படம் முதல் நாளில் மட்டும் ரூ. 10.34 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.

இந்த நிலையில், பள்ளிச்சட்டம்பி படத்துக்கு ரசிகர்களின் ஆதரவு பெருகியுள்ளதைத் தொடர்ந்து இப்படத்தின் வெற்றியை அறிவிக்கும் விதமாகப் புதிய டீசரை படக்குழு வெள்ளிக்கிழமை (ஏப். 17) வெளியிட்டுள்ளது.

மேலும், “பள்ளிச்சட்டம்பி” படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

“Pallichattamabi” success teaser, has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments