இந்தியா

திருப்பதியில் 24 மணிநேரத்தில் இலவச தரிசனம்: தேவஸ்தானம் அறிவிப்பு

DIN

திருப்பதியில் 24 மணிநேரத்தில் இலவச தரிசனம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு ஆதார் கட்டாயம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

கோடை விடுமுறையையொட்டி திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வருவதை அடுத்து, இலவச தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் சிரமம் அடைவதை தவிர்க்கும் வகையில், நேர ஒதுக்கீட்டின் படி டிக்கெட் வழங்கப்பட்டு அதே நாளில் தரிசனம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. 

சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 30 ஆயிரம் டிக்கெட்டுகளும், திங்கள், செவ்வாய் கிழமைகளில் 20 ஆயிரம் டிக்கெட்டுகளும், புதன், வியாழன், வெள்ளி ஆகிய தினங்களில் 17 ஆயிரம் டிக்கெட்டுகளும் வழங்கப்பட இருப்பதாகவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 

மேலும், ஆதார் அல்லது வாக்காளர் அட்டையை காண்பித்து இலவச தரிசன டிக்கெட்டை பெற்றுக்கொள்ளலாம் என்றும்  நள்ளிரவு 12 மணி முதல் இலவச தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 35 கோடி பறிமுதல்: ஜார்கண்ட் அமைச்சரின் செயலர், பணியாளர் கைது

தேர்தல் பணியிலிருந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்!

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பேருந்தை நிறுத்திய பயணிகள்!

சவுக்கு சங்கர் மீது சேலத்திலும் வழக்குகள் பதிவு!

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

SCROLL FOR NEXT