இந்தியா

நான் காங்கிரஸுக்கு கடன்பட்டவன், கர்நாடக மக்களுக்கு அல்ல: முதல்வர் குமாரசாமி

நான் காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே கடன்பட்டவன், கர்நாடக மக்களுக்கு அல்ல என அம்மாநில முதல்வர் குமாரசாமி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.

Raghavendran

கர்நாடகத்தில் தேர்தலுக்கு பின்பான காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. இதையடுத்து அம்மாநில முதல்வராக மஜத தலைவர் குமாரசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமைச்சரவை அமைப்பதில் தொடர் சிக்கல் நீடித்து வருவதால் இந்த இரு கட்சிகளிடையே தொடர் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தான் காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே கடன்பட்டுள்ளதாக கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது:

கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க தனிப்பெரும்பான்மையுடன் என்னை வெற்றிபெறச் செய்யுங்கள் என தேர்தல் பிரசாரத்தின் போது கர்நாடக மக்களிடத்தில் கோரிக்கை வைத்தேன். ஆனால், அவ்வாறு ஆட்சி அமைக்கும் பலம் என்னிடம் இல்லை. இங்கு நான் 6 கோடி கர்நாடக மக்களின் ஆதரவால் ஆட்சி அமைக்கவில்லை. காங்கிரஸ் கட்சியின் தயவு காரணமாகவே கர்நாடக முதல்வராகியுள்ளேன். 

ஒரு முதல்வராக எனது பணியை நான் செய்ய வேண்டும். இந்த மாநிலத்தின் வளர்ச்சிக்காக செயல்பட வேண்டும். இருப்பினும், நான் காங்கிரஸ் கட்சிக்கு கடன் பட்டுள்ளதால், அக்கட்சியின் தலைவர்களிடம் அனைத்து விவகாரங்களையும் கலந்து ஆலோசிக்க வேண்டியுள்ளது. அவர்களுடைய ஆதரவு இல்லாமல் என்னால் எதுவும் செய்ய இயலாது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

SCROLL FOR NEXT