முகப்பு
இந்தியா

ஐஎஸ் அமைப்பில் இணைந்த இளைஞர்: வீட்டுக்குத் திரும்ப வலியுறுத்தும் குடும்பத்தினர்

சமீபத்தில் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்த இளைஞரை மீண்டும் வீட்டுக்குத் திரும்புமாறு அவரது குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:13 PM
பகிர்:


ஸ்ரீநகர்: சமீபத்தில் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்த இளைஞரை மீண்டும் வீட்டுக்குத் திரும்புமாறு அவரது குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

பிலால் அகமது என்பவர், தனது மகன் எதெஷாம் பிலால், கையில் ஆயுதங்களுடன் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்து விட்டதாகக் கூறி விடியோ வெளியானதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இந்த நிலையில், தனது மகனுக்கு ஒரு விடியோவை வெளியிட்டுள்ளார். அதில், இஸ்லாம் மதம் எந்த வகையிலும் பெற்றோரின் பேச்சை மீறுவதை ஏற்பதில்லை. நீ வீடு திரும்ப வேண்டும் என்று உனக்கு கோரிக்கையாகவும், ஆணையாகவும் வைக்கிறேன். ஐ.எஸ். அமைப்பில் நீ இணைந்துவிட்டதைப் பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன். நோய் வாய்ப்பட்டிருக்கும் உனது தாயார் நீ இல்லாமல் வாழ மாட்டார் என்று பதிவிட்டுள்ளார்.

சார்தா பல்கலையில் படித்து வந்த மாணவன், கடந்த அக்டோபர் 28ம் தேதி மாயமானார். பிறகு அவர் ஐஎஸ் அமைப்பில் இணைந்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படம் பரவியதன் மூலமே அந்த தகவல் குடும்பத்தாருக்குத் தெரிய வந்தது.
 

முழு கட்டுரையைப் படிக்க →