முகப்பு
இந்தியா

அத்வானியின் 91வது பிறந்தநாள்: மோடி, அமித் ஷா வாழ்த்து

பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான அத்வானியின் 91வது பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

Updated On : 8 நவம்பர், 2018 at 1:45 PM
பகிர்:


புது தில்லி: பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான அத்வானியின் 91வது பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி வெளியிட்டிருக்கும் பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியில், இந்தியாவின் வளர்ச்சிக்கு அத்வானி செய்திருக்கும் பணியானது சிறந்த வகையில் நினைவுக்கூரத்தக்கது.

அவர் அமைச்சரவையில் அங்கம் வகித்த போது அவர் எடுத்த கொள்கைகளும், அவரது செயல்பாடுகளும் பாராட்டத்தக்கது என்றும் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

பாஜகவின் தலைவராக நீண்ட காலம் பதவி வகித்தப் பெருமையும், அடல் பிகாரி வாஜ்பாயி ஆட்சி காலத்தில் துணைப் பிரதமராக பதவியேற்று சுயநலமற்ற மற்றும் கடமையுணர்ச்சியோடு பணியாற்றியவர் என்றும் அத்வானியை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.